சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Feb 2015

ஐ.டி. வேலை: எப்போது உஷாராக வேண்டும்?

கவல் தொழில்நுட்பம்உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த துறை. உலகின் எல்லா நாடுகளிலும் நமக்கு தனி அடையாளம் கொடுத்த துறை- 80-களின் பிற்பகுதியில் ஆரம்பித்த இதன் வளர்ச்சி அசுர வேகம் தொட்டது. ஏராளமான இளைஞர்களை தன்பக்கம் ஈர்த்தது. அவ்வப்போது உச்சத்தையும், திடீரென காணாமல் போவதையும் இன்றைய மாணவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அதன் தேவைக்கு ஏற்ப பொறியியல் கல்லூரிகளில் இதன் சேர்க்கை அதிகமாவதும் குறைவதும் சாதாரணமாகி போனது. உண்மையில் இதன் பின்னணியில் நடப்பது என்ன ? எந்த தொழில் நுட்பம் எப்போதும் பசுமையாக இருக்கிறது அல்லது எவை குறுகிய காலத்துக்கு காணாமல் போகிறது என்பதை கூர்ந்து நோக்கினால் நம்மை எப்படி தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அறியலாம் .

உண்மையில் எந்த தொழில்நுட்பமும் தலை சிறந்ததோ அல்லது மற்றவற்றை காட்டிலும் குறைந்ததோ இல்லை. அந்தந்த நேரங்களில் இண்டஸ்ட்ரியில் ஏற்படும் தேவைக்கு ஏற்ப சில ஸ்கில் செட் அதிக தேவைக்கு உள்ளாகிறது. இதனால் சில சமயங்களில் இன்றும் கூட  common business oriented language (COBOL) போன்ற மிக பழமையான லாங்குவேஜ் கூட மிகவும் சூடாக இருக்கும். ஆனால் இன்றைய நிலையில் சிறந்து விளங்கும் ஜாவா மொழியில் வேலை வாங்குவது மிக கடினமாகவும் இருக்கும். அதனால் எதுவும் இங்கு பசுமையான நிலைத்து நிற்கும் தொழில்நுட்பம் இல்லை.
ஐடி துறையில் அதிக வருவாய் ஏன்

தகவல் தொழில்நுட்பம் மற்ற துறைகளை விட மிக அதிக வருவாயை தருவதேன் ? அது ஏன் மற்ற துறைகளை போல நிரந்தரமான வேலையை கொடுப்பதில்லைஏன் அடிக்கடி இந்த துறையின் வேலைவாய்ப்பு திடீரென உயர்வதும் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் தரைமட்டத்துக்கும் செல்கிறது? இந்த வேலையை நீங்கள் தேடும்போது ஒரு  துறையில் ஏராளமான வேலை வாய்ப்பும், எதிர்பார்த்ததை விட அதிக சம்பளம் கிடைப்பதும், குறைந்த காலத்தில் இதன் எண்ணிக்கை குறைவதும், சம்பளம் ஒரு கட்டத்தில் உயராமல் நின்றுவிடுவதும் நடக்கிறது?

இன்று இந்தியர்களின் மனநிலைப்படி ஒரு நிரந்தர வேலை என்பது மனதில் ஆழ பதிந்தவை ..காலையில் 9 மணிக்கு கிளம்பி, மாலை 6 மணிக்கு வீடு திரும்பி, 10 மணிக்கு தூங்கி எழுந்து, வார விடுமுறை தினத்தன்று குடும்பத்தோடு சினிமா, பீச் என்று பொழுதை கழிக்கும் சாதாரண குமாஸ்தா வேலை போன்றதா மென்பொருள் உற்பத்தி துறை?


மென்பொருள் தொழிலில் பணி நேரம் பல நேரங்களில் 12 - 14  மணி நேரங்கள் இருக்கும். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் கூட குடும்பத்தைப் பிரிந்திருப்பது சாதாரணம் . தேவைக்கு ஏற்ப திறன் மேம்பாடு குறிப்பிட்ட இடைவெளியில் வளர்த்து கொள்வது அவசியம். இல்லை எனில் நாம் விரைவில் காணாமல் போக நேரிடும். ஒரு புராஜெக்ட்டில் டெவலப்மென்ட் நிலையில்தான் மிக அதிக மனிதவளம் தேவைப்படுகிறது. உண்மையில் இந்த நிலையில்தான் மிக அதிக நேரம் உழைப்பதும், அடிக்கடி கிளையன்ட் தேவைக்கு ஏற்ப திரும்பத் திரும்ப மாற்றி எழுத வேண்டி இருக்கும். ஒரு நெருக்கடியான டெட் லைன் குறிக்கப்படுகையில், மேலும் அதிக திறனாளர்கள் தேவைப்படும்போது, அந்தத் தொழில்நுட்பத்துக்கு கிராக்கி ஏற்படுகிறது. அதற்காக கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் சந்தையில் சிறிய அதிர்வலையை ஏற்படுத்தும். ஆனால் இது நிரந்தரம் என்று அவசரம் அவசரமாக அதை கற்றுக்கொண்டு, பின் அதில் வேலை கிடைக்காமல் அல்லாடுவது கண்கூடு .நாம் எதிர்பார்த்த சம்பளமும் கிடைக்காமல் அடிமாட்டு சம்பளத்தில் மாட்டிக்கொள்வதும் உண்டு. அப்படியே வேலை கிடைத்தாலும், அதன் பிறகு சம்பளத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பல ஆண்டுகள் காலம் தள்ள வேண்டி இருக்கும்.

வேலை ஆட்டம் காண்பது ஏன்?
வேலையின் தன்மை - பணி நிரந்தரம் அல்லது ஒப்பந்தம் - இதில் உள்ள சாதக பாதகம் என்ன ? நமது பணியின் தன்மை நிரந்தரம் அல்லது ஒப்பந்தம் என்றால் எப்படி நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் 

ஒரு நிறுவனத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு என்பது பணியாளரின் எண்ணிக்கை  சார்ந்தது. இந்த ஊழியர்களுக்கு சேமநிதி, ஆயுள் காப்பீடு, வருட விடுமுறை, ஆண்டுதோறும் சம்பள உயர்வு என பலவற்றைத் தர வேண்டி இருப்பதால், அது அந்த நிறுவனங்களுக்கு ஒரு சுமையாகவே இருக்கும். மேலும் அவர்களிடம் இருக்கும் திறன் இன்றைய தேவைக்கு உகந்ததா என்ற நிச்சயமற்றத் தன்மையும் நிலவும். ஐந்தாறு ஆண்டுகளுக்கு மேல் ஒரே தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் இவர்கள், முற்றிலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் அன்றைய தேவைக்கு ஏற்ப குறைந்த சம்பளத்தில் சந்தையில் ஊழியர்கள் கிடைக்கும் பட்சத்தில் "நிரந்தரம்" ஆட்டம் காண்கிறது .
ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களை விட சம்பளம் அதிகமாக, சில சமயங்களில் நம்பமுடியாத அளவில் மிக அதிகம் இருக்கிறது. நிரந்தர ஊழியர்களுக்கு தரப்படும் கூடுதல் சுமை இவர்களுக்கு இல்லை என்பதும் குறிப்பிட்ட புராஜெக்ட் முடிந்த பின்பு இவர்களை எளிதில் வெளியில் அனுப்பி விடலாம் என்பதால் நிறுவனங்களின் முதல் சாய்ஸ் இவர்கள்.
பணிநிரந்தரம் இல்லை என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கள் திறனை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள். எந்த மோசமான சூழ்நிலைக்கும் தங்களை தயார்படுத்திக்கொண்டே வருவர் . இந்த தன்மை நிரந்தர ஊழியர்களிடம் மிக குறைவாகவே உள்ளது .
படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உள்ளதா

பொறியியல் கல்லூரிகளில் நம்மை எப்படி தயார்படுத்துகிறோம்? இங்கு நாம் பெரும் கல்விக்கும் நமது மென்துறையில் நாம் செய்யும் வேலைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? நாம் படிக்கும் படிப்புக்கும், செய்யப்போகும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாத நிலையில், கல்லூரியில் கிடைக்கும் கேம்பஸ் இன்டர்வியூவை மட்டுமே மலை போல நம்பி உள்ளனர். அது கிடைக்காத பட்சத்தில் நிலைகுலைந்து போகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது சற்று பெரிய நிறுவனங்களைத் தவிர, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பவர்கள் குறைவு.

இந்தியர்கள் மென்பொருள் உற்பத்தியில் உலகின் மற்ற நாடுகளை விட சிறந்தவர்களா ? இல்லையெனில் எப்படி நமக்கு இவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கின்றன ? "உலகிலேயே தென்னிந்தியர்கள்தான் மென்பொருள் உற்பத்தியில்  தலைசிறந்த  வல்லுனர்கள். உலகில் உள்ளவர்கள் எல்லாம் நம்மை விட திறனில் குறைந்தவர்கள்' என்பது நம்மிடம் ஆழப்பதிந்த ஒன்று. உண்மை நிலை வேறு. நம்மிடம் திறமை முற்றாக இல்லை என்று அர்த்தம் அல்ல. நமது வளர்ச்சிக்கு, நமது கடின உழைப்பும் அல்லது குறைந்த சம்பளத்துக்கு நீண்ட நேரம் வேலை பார்க்கும் பண்பும் சற்று தெளிவான ஆங்கில அறிவும்தான் காரணம். மற்றபடி இதே வேலையை வேறு நாட்டில் செய்ய குறைந்தது 25 மடங்கு செலவு செய்ய வேண்டும். இந்த செலவு அதிகரிக்கும்போது, நாம் போட்டித்தன்மையில் இருந்து காணாமல் போக வாய்ப்பு உள்ளது.
வேலை இழப்பு ஏன்

ஏன் இந்த வேலை இழப்பு? வேலை இழப்பவர்கள் உண்மையில் திறனற்றவர்களா? அதிக திறன் இருந்தும் ஏன் இவர்களை பணிநீக்கம் செய்கிறார்கள்? மற்ற நாடுகளில் இந்த நிலை இல்லையா? அதை எப்படி சமாளிக்கிறார்கள்மென்பொருள் உற்பத்தியில் திறன் பற்றாக்குறை நிலவுகிறதா ? 

இந்த தொழில்நுட்பம் நிலையற்றத் தன்மையை கொண்டது. இதன் வளர்ச்சி பொருளாதாரத்தை சார்ந்தே இருந்திருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டபோது, அந்த நாட்டில் மட்டுமல்லாமல் அதன் நட்பு நாடுகளிலும் பல ஆண்டுகள் இதன் தாக்கம் தெரிந்தது. பொருளாதார மந்தம் ஏற்படும்போது முதலில் உதை வாங்குவது இத்துறைதான் . இதனால்தான் பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது சாதாரண மனிதவள துறையில் வருவது இல்லை. சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணிபுரியும் நண்பர்களுக்கு எப்போது பணிநீக்கம் நடைபெறும் என்பதே தெரியாது.

இன்னொரு வேலையை தேடுவதும் சாதாரண தருணங்களில் சிரமம் அல்ல, இங்கே வேலை என்பதற்குநாம் கொடுக்கும் இலக்கணம் வேறு. இந்த நடைமுறை நமக்கு புதிது . காலையில் 70,000 ரூபாய் சம்பளம் வாங்குபவன், மாலையில் வேலை இழப்பது ஜீரணிக்க முடியாது.. ஆனால் உலகின் பல நாடுகளில் இதுதான் நடை முறை என்பதையும் ஏற்றுகொள்ள பக்குவம் வேண்டும் .வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள், மற்றவர்கள் இப்படிதான் வேலை செய்கிறார்கள் என்பதையும் , அவர்கள் எப்படி வேலையை தக்க வைத்துக்கொள்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள  வேண்டும். 

இந்தியாவின் தலை சிறந்த மென்பொருள் நிறுவனங்கள் ஒரு புராஜெட்ட் ஆர்டரைப் பிடிக்கும்போது தங்களிடம் போதிய தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யவேண்டும். அதற்காக சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை bench இல் இருப்பதாக காட்டுவர். அந்த புராஜெக்ட்  கைவிட்டு போகும் நிலையில், ஒன்றிரண்டு மாதங்களுக்குள் இந்த அப்பாவிகளுக்கு ரெட் நோட்டீஸ் கொடுத்து மூட்டையைக் கட்ட தொடங்குவார்கள் . கொஞ்ச நாள் சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுக்கும்போதே உஷார் ஆகி விடவேண்டும் .ஏன் நம்மால் அத்தனை சுலபமாக ஒரு தொழில் நுட்பத்துக்கு மாற இயலவில்லை? நமது இளைஞர்களின் தற்கால சமூக மாற்றம் எப்படி அவர்களின் திறன் மேம்பாட்டுக்குத் தடையாக உள்ளது ?

இத்துறையில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் வேலையை சேர்ந்தவுடனே தங்களது அனைத்து தேவைகளையும் ஒரு குறுகிய காலத்தில் நிறைவேற்ற முயல்கின்றனர் . அளவுக்கு அதிக கடனை வாங்கி குவித்து அல்லது ஆடம்பர வாழ்வில் மூழ்கி மீண்டு வர இயலாத நிலைக்குத் தள்ளபடுகின்றனர். இதனால் ஒரு சில மாதங்கள் வேலை இல்லாவிட்டால்கூட நொந்து நூடுல்ஸ் ஆகி போகிறார்கள். ஒரு புதிய திறனுக்கு பயிற்சி எடுக்கக்கூட போதிய நிதிவசதி இன்றி சுயத்தை இழக்கிறார்கள். வேலை இழக்கும்போது வேறு வழியின்றி பிறிதொரு நிறுவனத்தில் கிடைக்கும் சம்பளத்துக்கு சேர்ந்து வாழ்வை நரகமாக்கி கொள்கின்றனர். 

அடுத்து என்ன செய்யலாம்?

1)
எப்போதும் திறன் மேம்பாடு, காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பம் உள்ளங்கையில் இருக்க வேண்டும்.

2)
எங்கு நிலையற்றத்தன்மை இருக்கிறதோ அங்குதான் உங்கள் வளர்ச்சி இருக்கும். எப்போது ஒரு இடத்தில் சவுகர்யமாக செட் ஆகி விடுகிறீர்களோ அன்றோடு உங்கள் வளர்ச்சி முடிந்தது. 

3)
நீங்கள் போட்டியிடுவது உலகின் மற்ற நாடுகளோடு. அதனால், உங்கள் திறன் உலக தரத்தில் இருக்க வேண்டும். 

4)
இன்றைய நமது வளர்ச்சிக்கு நமது குறைவான சம்பளமும் ஒரு காரணம் ஆகும். முடிந்தவரை சில காலம ஆன்சைட் சப்போர்ட் ஆக வெளிநாடு சென்று பணியாற்றத் தயாராக ஆக்கி கொள்ள வேண்டும். இது பணம் செய்வதற்கு மட்டும் அல்ல. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய உதவும். 





No comments:

Post a Comment