சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Feb 2015

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.
நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..
துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!!!!!!!!

கோபம் வந்தால் இவற்றை மனதில் கொள்ளுங்கள்

* கோபம் வந்துவிட்டால், உடனே பத்து வரை எண்ணிக் கொண்டு வரலாம். அதாவது, கோபம் வரும் போது சற்று அமையாக இருந்து, மூச்சை உள்வாங்கி, பின் மூச்சை வெளிவிடும் போது மெதுவாக மனதிற்குள் 1,2,3 என்று பத்து வரை மெதுவாக சொல்லலாம். இது சிறுபிள்ளைத்தனமாக தெரியலாம். ஆனால் உண்மையில் இவ்வாறு செய்தால், கோபம் குறைந்துவிடும்.
* எப்போது டென்சனாக இருக்கிறீர்களோ, அப்போது யார் பேசினாலும் கோபம் வரும். ஆகவே அந்த நேரத்தில் சற்று தூரம் நடக்கலாம் அல்லது ஓடலாம். இதனால் மூளைச்செல்கள் சற்று ரிலாக்ஸ் ஆகி, உள்ளமும் சந்தோஷமாக இருக்கும்.
* கோபம் வரும் நேரம், எப்போதும் உடனடியாக பேச வேண்டும் என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அப்போது பேசும் பேச்சுக்கள் மற்றவர்களது மனதை பாதிக்கும். ஆகவே அந்த நேரத்தில் சற்று அமைதியாக இருந்து, யோசித்து, என்ன பேச வேண்டுமோ, அவை அனைத்தையும் நினைத்துப் பார்த்து, பிறகு பேசுங்கள்.
* மன்னிப்பு மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். ஒருவர் உங்களுக்கு ஏதேனும் தவறையோ அல்லது தீங்கோ ஏற்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் கோபத்திற்கு அனுமதிக் கொடுத்தால், பின்னர் பாசிட்டிவ் ஃபீலிங் அனைத்தும் நெகட்டிவ்வாக மனதிற்குள் தோன்ற ஆரம்பித்துவிடும். ஆனால் அதுவே மன்னித்துவிட்டால், அப்போது நீங்கள் ஒரு பெரிய மனிதர்களாக அனைவருக்கும் தெரிவீர்கள். பின்னர் நீங்களே உங்கள் கோபத்தின் மீதே கோபம் கொண்டு, வெறுத்துவிடுவீர்கள்.
* பதற்றமாக இருக்கும் நேரம் ஏதேனும் நகைச்சுவையைப் பார்க்கலாம். அதிலும் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் காமெடி நடிகர்கள் நடித்த சீன்களை பார்த்தால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆகும். மேலும் டென்சனும் அகலும்.
* எப்போதெல்லாம் டென்சன் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டும். அதாவது மூச்சுப்பயிற்சி, பிடித்தப் பாடல்களைக் கேட்பது, மனதிற்குள் சில வாக்கியங்களானடேக் இட் ஈஸி”, “ஆல் இஸ் வெல்போன்றவற்றை மனதிற்குள் சொல்லலாம். இவை அனைத்தும் மனதை சற்று தெளிவுறச் செய்யும்.


No comments:

Post a Comment