சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Feb 2015

சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம்

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
ஆண் பெண் ன்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!
சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம்.
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும். அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு 
பணத்துக்காக சிதைந்து விட்டது.
சிறுநீரக கல்லால் அவதிப்படுபவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பலன் பெறுங்கள். குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக 
வெட்டி விடவும். ஆனால் வாழை மரத்தை வேரும் பிடுங்க கூடாது.
இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும்.
இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, , பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் 
அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.அதனை அப்படியே பானம் அருந்தும் ஸ்டிரா கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும்.
இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் 
கழித்து வழக்கம் போல சாப்பிடலாம். இதை குடித்து அரை நாளில் வலி படிப்படியாக குறைந்தது அன்றே முற்றிலுமாக வலி போய் விடும்.

சீறுநீர் கழிக்கும் போதும் வலி இருக்காது. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடித்து வர வேண்டும். பின்னர் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து 
பாருங்கள் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு வரும்
.

No comments:

Post a Comment