சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Feb 2015

பொட்டு சுரேஷ் கொலை... அட்டாக் என்ன ஆனார்? (மினி தொடர்-2)


பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ் கொலை நடந்த அதே நாளன்று காலை மதுரை ஜே.எம். நீதிமன்றத்திற்கு வழக்கு விஷயமாக பிரபல ரவுடி சப்பாணி முருகன் வந்தார். அப்போது பொட்டு கொலையில் சரண்டராகியுள்ள சந்தானமும் வேறு சிலரும், முருகனுடன் நீதிமன்ற வளாகத்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
கொலை சம்பவத்துக்குப் பிறகு சரண் அடைந்த ஆட்களின் படத்தைப் பார்த்த போலீஸார், முருகனுடன் சந்தானம் பேசியதை உறுதிபடுத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருக்கின்றனர். இன்னும் சில விவரங்களை வைத்து, பொட்டு சுரேஷ் கொலையில் முருகன் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா? என்று ஜெயில் ஏரியாவை உள்ளடக்கிய செல்போன் டவரை செக் செய்தனர். செல்போன் வழியாக தகவல் பரிமாற்றம் நடைபெறவில்லை என்பதால், கொலை நடப்பதற்கு முன்பாக முருகனை நேரில் சந்தித்துப் பேசியவர்கள் யார், யார் என்றும் சிறைச்சாலை பதிவேடுகளை ஆய்வு செய்தனர் 

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த விஜயபாண்டி, மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியபிரபு ஆகியோர் சேலம்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் விஜயபாண்டி, அட்டாக் பாண்டியின் சகோதரி மகன் ஆவார். இவர்கள் கொடுத்த வாக்கு முலம்தான் இக்கொலையின் பின்னணியை முழுமையாக வெளியுலகத்துக்கு கொண்டு வந்தது. 


''
கடந்த மாதம் தலைநகரத்துடன் (அட்டாக் பாண்டி) சென்னை சென்று முக்கியமான வி..பி.க்களை சந்தித்தோம். தலைநகரத்துக்கும் அவரது மச்சான் திருச்செல்வத்துக்கும் குடும்பப் பிரச்னையால் விரோதம் இருந்து வந்தது. இதை தெரிந்துகொண்ட பொட்டு சுரேஷ், தலையுடன் நேரடியாக மோத முடியாமல் திருச்செல்வத்திடம் பண ஆசையை காட்டி தலையை போட சொல்லியுள்ளார். இந்தத் தகவல் எங்களுக்கு வந்ததால், அதற்குள் நாம் முந்த வேண்டும் என்று தலை உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நாங்கள் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள ஒரு லாட்ஜில், ஜனவரி 16 ஆம் தேதி முதல் ரூம் போட்டு, பொட்டுவைக் கொல்ல திட்டம் தீட்டினோம். வெளியில் இருந்து ஆட்கள் அழைத்து வந்தால் தெரிந்துவிடும் எனக் கருதி, சந்தானம் மூலம் ஆட்களை ஏற்பாடு செய்து காரியத்தை முடிக்கத் திட்டம் தீட்டினோம். 

ஆட்களைத் தேர்வு செய்யும் வேலையை, சபாரத்தினம் ஏற்றுக்கொண்டார். தினமும் பொட்டுவை கண்காணிக்கும் பொறுப்பை, ஜோதி ஏற்றுக்கொண்டார். ஜனவரி 31ல் சுரேஷைக் கொல்ல, முதல் நாள் இரவில் இருந்தே கண்காணித்தோம். சம்பவத்தன்று, சொக்கிக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து சுரேஷ் புறப்பட்டதை ஜோதி சொல்ல, உடனடியாக கார்த்திக்கின் டாடா ஏஸ் வண்டியில் டி.வி.எஸ். நகருக்கு வந்தோம். ஜோதி தன் பல்சர் வண்டியில், பனிக்குல்லா அணிந்தபடி சுரேஷைப் பின்தொடர்ந்து வந்தார். கார் மீது சுரேஷ் மோதி, அவரது கவனத்தை திசை திருப்பினார். இதைப் பயன்படுத்தி, சந்தானமும், சபாரத்தினமும் முதலில் சுரேஷின் தலை, தாடையில் கத்தியால் குத்த, அடுத்தடுத்து நாங்கள் வெட்டி கொன்றோம். யாரைக் கொன்றோம் என்பதை, 20 நிமிடங்களுக்குப் பிறகே செந்தில், சேகருக்கு நாங்கள் சொன்னோம். நட்புக்காக எங்களுடன் வந்தார்கள். கார்த்திக்குக்கு முதல் நாளே தெரியும்’’ என்று சாதாரணமாகத் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு போலீஸ் அதிர்ந்தது. ஆனால், சென்னையில் சந்தித்த வி..பி.கள் யார் என்பதை மட்டும் கடைசி வரை சொல்லவில்லைபோலீஸ் தனிப்படையோ, சென்னை தி.நகரில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சி.சி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்துள்ளது. போலீஸும் இதுவரை அதுபற்றி வெளிப்படையாக தெரிவிக்காமல் ரகசியம் காக்கிறார்கள். 

இதில், அட்டாக் வழக்கமாக பயன்படுத்தும் மூன்று செல்போன் எண்கள் ஸ்விச்டு ஆஃப் செய்யப்பட்டிருந்து. ஆனால், நாற்பது சிம்களை அவர் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அப்படியும் டவரை வைத்து கண்டுபிடித்ததில் பாண்டியின் மொபைல் போன் பெங்களூரு, சென்னை மயிலாப்பூர், மும்பை என, மாறி மாறி காண்பித்து, போலீஸாரைக் குழப்பமடைய செய்தது. அட்டாக் சிக்கும் வரை, சரணடைந்தவர்களிடம் விஷயங்களைக் கறக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துகொடுத்தது போலீஸ். இதுமட்டுமல்லாது, பெரிய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சேலம் தி.மு.. பிரமுகர் ஒருவரும் இவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அவரும் ஏதோ ஒருவகையில் பொட்டுவால் பாதிக்கப்பட்டவராம்.

இப்படி வேகமாக போய்கொண்டிருந்தது போலீஸ் விசாரணை.
அதற்கு முன் அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் வரலாறு என்னவென்று பார்த்து விடுவோம்.

மதுரையில் அனைத்து கட்சிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகம். அப்படி கமுதியில் இருந்து பிழைக்க மதுரைக்கு வந்தவர்களில் பாண்டியின் குடும்பமும் ஒன்று. தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் வேலுச்சாமி, எஸ்ஸார் கோபி ஆகியோர் இவருக்கு உறவினர்தான்.

'நம்ம ஊர் பையனாச்சே' என்று தி.மு..வுக்குள் இழுத்துவிட்டவர். தன் ஏரியாவில் அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு ரவுடியாக ஓரளவு ஃபார்ம் ஆன பாண்டி, தன் பெயருக்கு முன்அட்டாக்' என்ற அடைமொழியை போட்டுக்கொண்டார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவர் வீட்டை தன்னுடைய அடியாட்கள் மூலம் பாதுகாத்தவர். காந்தி அழகிரி, துரை தயாநிதி வெளியில் செல்லும்போது, இன்னொரு காரில் சென்று அவர்களை பாதுகாத்தவர். எப்போதும் அழகிரி வீட்டுக்கு முன் அமர்ந்துகொண்டு கண்காணித்தவர். அதனால் துரையின் அன்பைப் பெற்றார். 

ஒரு நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டு அழகிரியைக் கோபப்படுத்த, அந்தப் பத்திரிகை அலுவலகத்தை தன் ஆட்களோடு எரிக்கச் சென்றவர் அட்டாக். அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கில் விடுதலையாகி வந்தார். தனக்காக இவ்வளவு செய்கிறானே என்று அழகிரியின் பாசத்துக்கு ஆளானார். அதனால்தான் அவருக்கு மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் என்ற பெரிய பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார் அட்டாக். அவரைப் பார்த்து எல்லோரும் பயந்த நேரத்தில், அவருக்கு குடைச்சலைக் கொடுத்தவர் பொட்டு சுரேஷ்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் இருந்து மதுரைக்குப் பிழைக்க வந்தது பொட்டு சுரேஷ் குடும்பம். ஆரம்பத்தில் குடும்பம் நடத்தவே ரொம்ப கஷ்டப்பட்டவர், இவர் செய்யாத வேலை இல்லை. சாலையோரத்தில் ரெடிமேட் ஆடைகள் வியாபாரம் செய்தவர். அப்போதே கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதிகளுடன் பழக ஆரம்பித்தார். கமிஷன் வேலைகள் செய்ய ஆரம்பித்தார். தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அப்போது மதுரை தி.மு..வில் ஜமீன்தார் போல செயல்பட்ட பி.டி.ஆரின் வீட்டில் எடுபிடியானார்.
அதை வைத்து பலபேரின் அறிமுகம் கிடைத்தது. எப்போதும் குங்குமப் பொட்டு வைத்திருப்பதால் பி.டி.ஆர்.தான் சாதா சுரேஷை 'பொட்டு' சுரேஷ் ஆக்கினார். அப்படியே அழகிரியின் நண்பர் முலம் அழகிரி அணிக்குத் தாவினார். அழகிரியின் பர்சனலான விஷயங்களைச் செய்யும் அளவுக்கு அங்கு வளர ஆரம்பித்தார். காண்ட்ராக்ட், கமிஷன், தொழில் ஆரம்பிப்பது என்று டெவலப் ஆனார். அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டி வைக்குமளவுக்கு அழகிரியால் அதிகாரம் கொடுக்கப்ட்டார். 

இவருடைய வளர்ச்சி அங்கே ஏற்கனவே அழகிரியுடன் ஒட்டியிருந்த பலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அதில் நேரடியாக மோதியவர் அட்டாக் பாண்டி..!No comments:

Post a Comment