சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 'பளார்' விட்ட ஸ்டாலின்! (வீடியோ)


தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 'நமக்கு நாமே' பயணத்தை மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின், இரண்டாம் கட்ட பயணத்தை நீலகிரியில் நேற்று (7ஆம் தேதி) துவக்கினார். முதுமலை தெப்பக்காடில் தனது பயணத்தை துவக்கிய ஸ்டாலின், கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டு, மக்களோடு உரையாற்றினார். அப்போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கியதாக சொல்லப்பட்டது. ஆனால், அதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. அந்த ஆட்டோ டிரைவரும் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நடைபயணத்தின் போது ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை தாக்கிய வீடியோ காட்சிகள் இன்று வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிய இந்த வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில், ஸ்டாலின் மக்கள் மத்தியில் நடந்து வருகிறார். கூட்ட நெரிசல் அதிகரிக்க, மக்களை விலக்கிக்கொண்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியே நடந்து வருகிறார். அப்போது அவருக்கு நெருக்கமாக சென்று தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயல்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அப்போது ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்து, அவரை தள்ளி விடுகிறார் ஸ்டாலின். தொடர்ந்து அவருடன் வரும் பாதுகாவலர்களும் ஆட்டோ டிரைவரை தள்ளி விடுகின்றனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் அரண்டு போகிறார்.


ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கிய இந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஆட்டோ டிரைவரின் பெயர் திலீப் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னையை அடக்க தி.மு.க.வினரும், பிரச்னையை பெரிதாக்க அ.தி.மு.க.வினரும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.


ஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணித்த போது, பயணி ஒருவரை ஸ்டாலின் தாக்கியதாக எழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் அடுத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.No comments:

Post a Comment