தமிழகத்தில் நவராத்திரி விழாவின் 9வது நாளில் ஆயுத பூஜையும், 10வது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். மேலும் முக்கிய பண்டிகையான தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன.
அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன. இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சில ஆம்னி பஸ்களில் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக ஆம்னி பஸ் பயணத்தை நடுத்தர மக்களும் நாடுகின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் குறிப்பாக ஆம்னி பஸ்களில் இடம் கிடைப்பது அரிதாக இருப்பதால் அதனை பயன்படுத்தி சில ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் கட்டண கொள்ளையில் ஈடுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, சேவை வரி, சுங்கவரி உயர்வு போன்ற காரணத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் 20 சதவீதம் கட்டணம் உயர்த்தினர். அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண ஆம்னி பஸ்களில் ரூ.715ம், குளிர் சாதன வசதியுள்ள பஸ்களில் ரூ.880–ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு சில தனியார் ஆம்னி பஸ் நிறுவன இணைய தளங்களில் பல மடங்கு கட்டண உயர்வுடன் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்ததை விட இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக முன் பதிவு செய்த பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயணி ஒருவர் கூறும்போது, சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண ஆம்னி பஸ்சில் கடந்த வாரம் செல்லும் போது ரூ.850 கட்டணம் வசூலித்தனர். ஆனால், தற்போது இணைய தளத்தில் ரூ.1000 என்றும், மற்றொரு நிறுவன இணைய தளத்தில் ரூ.1199 என்றும் குறிப்பிட்டுள்ளனர். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் இருந்து, சென்னைக்கு 1,500 ரூபாயும், இந்த இடங்களில் இருந்து, சேலம், கோவை, ஈரோடு ஆகிய நகரங்களுக்கு, 1,000 ரூபாயும், மதுரை, கோவையில் இருந்து சென்னைக்கு, 1,000 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பஸ் கட்டணம் அவரவர் இஷ்டத்துக்கு முடிவு செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய போக்குவரத்து துறை அதிகாரிகள் தூக்கத்தில் உள்ளனரா அல்லது ஒன்றும் தெரியாமல் இருப்பது போல் நடிக்கிறார்களா?
அரசின் மெத்தனம் மறைவது எப்போது... ஆம்னி கட்டண கொள்ளை ஒழிவது எப்போது?

No comments:
Post a Comment