சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைமை மது குடிக்கவும், அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதற்கும், முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கும் தடை விதித்துள்ளது.
தூய்மையான நிர்வாகம் மற்றும் நிபந்தனையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி, கட்சியின் பொலிட் பீரோ இந்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் மிகவும் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டியவை என்று சீனாவின் சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 88 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, தெரிந்தவர்களுக்கு கட்சி சார்பாக சலுகை காட்டுவதையும் கண்டிப்போடு அணுகும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஸீ ஜின்பிங் அங்கு அதிபராகப் பொறுப்பேற்றது முதல் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சிக்கி, பதவியையும் உடைமைகளையும் இழந்துள்ளனர்.
கோல்ஃப் விளையாடுவது, அளவுக்கு அதிகமாக உண்ணுதல் மற்றும் மது அருந்துதல் இனி கட்சி ஒழுக்கத்தை மீறிய செயலாகவே கருதப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று சீனாவின் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

விதிமுறைகளை மீறும் கட்சி உறுப்பினர்களுக்கான தண்டனை பற்றி இந்த விதிமுறைகளில் வெளிப்படையாக கூறப்படவில்லை என்றாலும், கட்சியின் உள் ஒழுக்க நடவடிக்கைகள் அச்சமூட்டக் கூடியவை என்பது உலகம் அறிந்ததே. அதாவது சீனாவின் குற்றச் சட்டத்தையும் கடந்தது கட்சி ஒழுக்கம் என்பது கவனிக்கத்தக்கது.
கோல்ஃப் ஆட்டம் நிறைய பணத்துடனும், மேற்கத்திய நாட்டினரின் பழக்க வழக்கங்களுடனும் ஒப்பிடப்பட்டு வரும் சீனாவில், தற்போது அவற்றுக்கு கட்சி மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment