சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Oct 2015

இந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிறிஸ்டன் மறுப்பு!

ந்திய அணிக்கு மீண்டும் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. அவரை அணுகியதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர்  கேரி கிறிஸ்டன் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ்தான் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. தொடர்ந்து அப்போதே கேரி  கிறிஸ்டன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.

அதற்கு பின், கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் பயிற்சியாளராக இருந்தார். உலகக் கோப்பை முடிந்தவுடன் அவரது ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது. அதற்கு பிறகு புதிய பயிற்சியாளர் இந்திய அணிக்கு நியமிக்கப்படவில்லை. ரவி சாஸ்திரி, அணி இயக்குனராக நியமிக்கப்பட்டு அவரது மேற்பார்வையில்தான் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கேரி கிறிஸ்டனை இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக பொறுப்பேற்க வைக்க பி.சி.சி.ஐ அணுகியதாகவும் ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாகவும் அவரே கூறியுள்ளார்.
இது குறித்து இன்று மும்பை வந்த கேரி கிஸ்டன் கூறுகையில், பி.சி.சி.ஐ. தரப்பில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததை ஒப்புக் கொண்டார். "இதை ஒரு பெரிய கவுரவமாக நான் உணர்கிறேன். ஆனால் தற்போது  இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்க முடியாத நிலையில் இருக்கிறேன்'' என்றார். 

No comments:

Post a Comment