சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Oct 2015

ரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற்ற பயணி!

யில் கழிவறையை ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது மற்றொரு பயணி கதவை திறந்ததால், அந்த பயணி ரயில்வே நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்தார். அவருக்கு  ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக குருதர்ஷன் லம்பா என்பவர் தொடுத்த வழக்கில்,  இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் என்ற இடத்துக்கு,  சம்தா எக்ஸ்பிரசில் குருதர்ஷன் லம்பா பயணித்துள்ளார்.
முதல் வகுப்பு பெட்டியில் பயணித்த லம்பா, ரயில் பெட்டியில் உள்ள கழிவறையை பயன்படுத்திக்கொண்டு இருக்கும் போது, மற்றொரு பயணி வெளியே இருந்து கதவை திறந்து கொண்டு உள்ளே வந்துள்ளார். இத்தனைக்கும் குருதர்ஷன் லம்பா கழிவறை கதவின் கொண்டிகளை அடைத்து விட்டு பயன்படுத்தியுள்ளார். அப்படியிருந்தும் கதவு திறக்கப்பட்டதால், லம்பா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் துர்க் சென்றடைந்ததும், இது குறித்து ராய்ப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் மீது லம்பா வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவத்தால், தான் மிகவும் மன உளைச்சலுக்குள்ளானதாகவும் லம்பா தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைத்ரியா மாத்தூர், ''முதல் வகுப்பில் ஒரு பயணி அதிக கட்டணம் செலுத்திதான் பயணிக்கிறார். அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு, அதற்குரிய வசதிகளை செய்து தராத ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடு தவறானது. இதனால், பாதிக்கப்பட்ட பயணிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் இழப்பீடும்,  வழக்கு செலவுக்காகத் தனியாக  ரூ. 10 ஆயிரமும் ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்" என  உத்தரவிட்டார்.

ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அதே பெட்டியில் மேலும் 3 கழிவறைகள் இருந்தன. அதில் ஒன்றை குருதர்ஷன் பயன்படுத்தியிருக்கலாம்" என்று  வாதிட்டார். ஆனால் அதனை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. 


No comments:

Post a Comment