சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

பருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன?

ன்னியாகுமரியில் தயார் செய்யப்படும் மெதுவடை முதல், டெல்லியில் தயார் செய்யப்படும் தால் வரை, பலவகையான பதார்த்தங்களிலும் பருப்புக்கு முக்கிய இடமுண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பருப்பு வகைகள், இன்றைக்கு 210 ரூபாய் வரை விலை உயர்ந்து, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் வீடு, ஹோட்டல்களில் பயன்படுத்தும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது.

இந்த விலை உயர்வுக்கான காரணங்கள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் முன்னாள் பேராசிரியரும், சந்தை தொழில்நுட்ப வல்லுனருமான முனைவர் ரவீந்திரனிடம் கேட்டோம்.
"இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு வகைகள் ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆகையால், பருப்புக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இந்திய மக்களின் ஓர் ஆண்டு பயன்பாட்டுக்கு 220 லட்சம் டன் பருப்பு வகைகள் தேவை. ஆனால், நம் நாட்டில் 180 லட்சம் டன் அளவுக்கு மட்டும்தான் உற்பத்திச் செய்யப்படுகிறது. மீதம் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை பருப்பு உற்பத்தியில், உத்தரபிரேதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்கள்தான் முக்கிய அங்கம் வகிக்கின்றன. 99 சதவிகிதம் பருப்பு உற்பத்தி, மானாவாரி நிலங்களில்தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சரியான பருவத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யாமல் பருவம் தவறி பெய்த மழை, புயல் காரணமாக வடமாநிலங்களில், இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகர்களின் கூற்றுப்படி இந்த ஆண்டு 20 சதவிகிதம் அளவுக்குப் பருப்பு உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பருப்பு பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு 35 முதல் 40 லட்சம் டன் பருப்பை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும். தற்சமயம் நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் பருப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. மத்திய அரசு துரிதமாகச் செயல்பட்டு தேவையான அளவுக்கு பருப்பை இறக்குமதி செய்தால், விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்" என்றார்.


No comments:

Post a Comment