சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Oct 2015

லில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந்த' குடிமகன்கள்' அதிர்ச்சி!

குடிபழக்கமுள்ள கணவரை திருத்த பெண் ஒருவர் மதுபாருக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவத்தால் குடிமகன்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கோவை கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர்  ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியரான ஜெயக்குமாருக்கு குடிபழக்கம் இருந்தது. இரவு பகலாக குடிப்பதை ஜெயக்குமார் வாடிக்கையாக வைத்திருந்தார். இதனால் குழந்தையை வைத்து கொண்டு ஜெயக்குமாரின் மனைவி லில்லி பெரும் சிரமப்பட்டார். அதோடு தினமும் மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதோடு சம்பளம் பணத்தில் பெரும்பகுதியை குடித்தும்  அழித்து வந்தார். 

கணவரை திருத்த லில்லி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க லில்லி முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக கணவர் எந்த மதுபாரில் அமர்ந்து குடிக்கிறார் என்பதை அவர் கண்காணித்து வந்தார். கோவை அத்திப்பாளையம் அருகே உள்ள மதுபாரில் கணவர் தினமும் மது குடிப்பதை அறிந்து கொண்டார். 

இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அந்த பாருக்கு சென்ற லில்லி, அங்கே அமர்ந்து கொண்டார். மதுபாருக்குள் திடீரென்று ஒரு பெண் வந்து அமர்ந்து கொண்டதால் , காலையிலேயே டூட்டியில் ஜாயின் பண்ணியிருந்த குடிமகன்கள்  அதிர்ச்சி அடைந்தனர். அவரை வெளியே போகுமாறு அங்கிருந்த குடிமகன்கள் கட்டாயப்படுத்தினர். அதற்கு லில்லி, எனது கணவர் இங்கேதான் தினமும் மது குடிக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து மது குடிக்கப் போகிறேன் என்றார். இதனை கேட்ட குடிமகன்கள் திகைத்து போனார்கள்.

இதற்கிடையே லில்லியின் கணவர் ஜெயக்குமார், விஷயம் தெரியாமல் வழக்கம் போல மது குடிக்க அந்த பாருக்கு வந்தார். உள்ளே மனைவி அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டு மனைவி லில்லியை திட்டினார். அதற்கு லில்லி எனக்கும் ஒரு குவார்ட்டர் வாங்குங்கள். இருவரும் சேர்ந்து மது குடிப்போம் என்று பதிலளித்தார்.
இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான ஜெயக்குமார் மனைவியை சமானதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து போக முயன்றார். அதற்கு லல்லி மறுத்து, முடிவு தெரியாமல் போக மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் கணவன் மனைவியிடையே மதுக்கடையில் வைத்து தகராறு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் லில்லி, கணவர் மது குடிப்பதை நிறுத்தும்படி பல முறை கூறினேன். அவர்  கேட்கவில்லை. இதனால்தான் இது போன்ற இடத்துக்கு வரவேண்டியதாகி விட்டது என்றார். போலீசாரும் ஜெயக்குமாரை கண்டித்ததோடு, அறிவுரையும் வழங்கினர். 

போலீசாரிடம் லில்லி, எனது கணவர் இங்கே வந்து மது குடித்தால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். பின்னர் ஒருவழியாக கணவன் மனைவியிடையே சமாதானம் ஏற்பட்டு மதுக்கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். 

லில்லியின் இந்த அதிரடி போராட்டத்தால், ஸ்தம்பித்து போய் நின்றிருந்த குடிமகன்கள் இதே போன்று தங்கள் மனைவிமாரும் தர்ணாவில்   ஈடுபட்டால், என்ன செய்வது என்று  புலம்பியவாறே  டாஸ்மாக்கை விட்டு ஓட்டம் பிடித்தனர். 

No comments:

Post a Comment