ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக உருவெடுக்கவுள்ள அமரவாதி நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி புதிய தலைநகரத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத் நகரம் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக செயல்பட்டு வருகிறது. ஆந்திராவுக்கு என்று தனியாக தலைநகரம் தேவைப்பட்டது. தொடர்ந்து ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு குண்டூர் மாவட்டத்தில் அமரவாதி என்ற பெயரில் புதிய தலைநகரை உருவாக்க சந்திரபாபு நாயடு அரசு முடிவு செய்தது.
அதன்படி புதிய நகரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதற்காக ஆந்திரா முழுவதும் இருந்து 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் அமரவாதியில் தூவப்பட்டன. அதோடு புனித நீரும் ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது.

இன்று காலை 11.55 மணிக்கு, விழா நடைபெறும் இடத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். சரியாக 12.45 மணிக்கு பிரதமர் மோடி, அமரவாதி நகரத்துக்கான அடிக்கலை நட்டு வைத்தார்.
இந்த விழாவில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கான பொதுமக்களும் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment