சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Oct 2015

சசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்தில் உறவுகள்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், கார்டனில் சசிகலாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவரது குடும்ப உறவுகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளதுடன், தேர்தலில் சீட் கிடைக்கும் என்ற ஆசையில் அவருடைய ஆதரவாளர்கள் இப்போதே உற்சாகத்தில் மிதக்கின்றனர்.
 
அ.தி.மு.க. ஆட்சி அமைந்த தொடக்கத்தில் மேலிடத்தில் ஏற்பட்ட மனகசப்பால் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார் சசிகலா. அதன் பிறகு அவரது கணவர் நடராசன், தம்பி திவாகரன் மற்றும் குடும்பத்தின் முக்கிய புள்ளிகள் மீது வழக்குகள் பாய்ந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சசிகலா மீண்டும் கார்டனில் நுழைந்தார். ஆனாலும் அடக்கியே வாசித்தார்கள் அவரின் உறவினர்கள். ஆரம்பத்தில் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை ஜெயலலிதா இப்போது கொடுக்க தொடங்கியுள்ளதால், அது  அவரது உறவுகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகளும் அவர்களை சுற்றி வர தொடங்கியுள்ளனர்.

இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, "அ.தி.மு.க ஆட்சி என்றாலே மன்னார்குடியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிரொலிக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று அ.தி.மு.க.வில் இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் அவர்களின் ஆதரவோடு வந்தவர்கள்தான். ஆனால் காலம் மாறி சசிகலா கார்டனில் இருந்து வெளியேறிய பிறகு சசிகலா உறவுகளிடம் தொடர்பு வைத்திருந்தவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலைமையும் வந்தது. மேலிடத்தின் மன கசப்புகள் மாறி கார்டனுக்குள் சசிகலா நுழைந்தும் அமைதியாக வலம் வந்தனர் அவரது உறவுகள் மற்றும் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள்.

சென்னை ஆர்.கே நகர் இடைதேர்தல் பிரசாரம் முழுக்க ஜெயலலிதாவுடன் சசிகலா கூட இருந்தது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அவரது உறவினர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. சமீபத்தில் மன்னார்குடியில் திவாகரன் மைத்துனர் திருமணம் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடராசன், திவாகரன், மகாதேவன் ஆகிய மூவரும் மனம்விட்டு நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தனர். மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும் என கடந்த ஆண்டு நடந்த தனது அண்ணன் மகன் கல்யாணத்துக்கு திவாகரன் வராமல் அவரது மனைவியை மட்டும் அனுப்பி வைத்தார். ஆனால் மன்னை கல்யாணத்தில் நடராஜன் கலந்து கொண்டது உறவுகள் ஒன்று கூடியதை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் முக்கிய அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளும் ஏராளமானோர் திவாகரன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர்.
 
சில ஆண்டுகளாக பெரியார் பிறந்தநாளின்போது தஞ்சாவூரில் உள்ள அவரது சிலைக்கு நடராசன் மாலை அணிவித்து வருகிறார். வழக்கமாக அவர் அமைதியாக வந்து செல்வார். ஆனால் இந்தாண்டு அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடி அவரை புகழ்ந்து கோஷமிட, பட்டாசு வெடிக்க மாலை அணிவித்து சென்றார். நாளை (23-ம் தேதி) நடராஜனின் பிறந்த நாள். இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் பிளக்ஸ் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர். "பழகிப்பார் எங்களின் பாசம் தெரியும், பகைத்து பார் எங்கள் வீரம் புரியும்" என பிளக்ஸ் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

சசிகலா அண்ணன் மகன் மகாதேவன், வழக்கு மற்றும் கைதில் இருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலி என கூறுவார்கள் தஞ்சை பகுதியில். அதன் பிறகு அமைதியாய் இருந்தவர். தற்போது அவருடைய ஆதரவாளர்கள் காரில் அணிவகுத்து செல்ல, பழையபடி பந்தாவாக வலம் வரத் தொடங்கியுள்ளார். இவர்களின் உற்சாகத்துக்கு காரணம் சசிகலாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்தும் என்றே சொல்கிறார்கள் உள் விபரம் அறிந்தவர்கள்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், மன்னார்குடியின் பார்வைபட்டால் சீட் கிடைக்கும் என்று இப்போதே அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களை அணுகி வருவதாகவும் சொல்கிறார்கள். அதற்கு கடந்த காலங்களும், இப்போது இருக்கும் நிர்வாகிகளும் சாட்சி என்றும் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment