சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..!

க்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்‌ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.?
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய 15 அணிகளுக்கு மேல் மீதி நாடுகள் எதுவுமே கிரிக்கெட்டில் ஜொலிப்பது கிடையாது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கூடியவை. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் போட்டாபோட்டி நடக்கும் இந்த வல்லரசு நாடுகளில் கூட, இன்னும் கிரிக்கெட் பிரபலமாகவில்லை. இப்படி கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் எப்படி கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது? எப்படி கொண்டு சேர்ப்பது? என யோசித்த ஷேன் வார்னே மற்றும் சச்சின் இருவரும் இதை அப்படியே ஐ.சி.சி. இடம் எடுத்து சொல்லி போட்டிக்கு அனுமதி கேட்க, தாரளமாக நடத்துங்கள் என பச்சைக்கொடி காட்டிவிட்டது.

“நானும் சச்சினும் ஏன் கிரிக்கெட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு செல்ல கூடாது என தோன்றியது. கிரிக்கெட்டை கண்காட்சிகள் வழியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றால் கிரிக்கெட்டின் ஆரோக்கியம் வளரும்” என்கிறார் ஷேன் வார்னே.
இதற்கான ஒய்வு பெற்ற வீரர்களை அவர்களிடம் தொடரில் விளையாட சம்மதம் பெற்று 28 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்திருக்கிறார் சச்சின். மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அமெரிக்காவின் மூன்று முக்கிய பேஸ்பால் மைதானமாக இருக்கும், சிகாகோவின் ரிக்ளி ஃபீல்டு, நியூயார்க்கின் யான்கீ மைதானம், லாஸ் ஏஞ்சல்ஸ் டோஜர் மைதானம் என மூன்று இடங்களை டிக் அடித்திருக்கின்றனர்.

இதன் மூலம் வருகின்ற வருமானம் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இப்படி நான்கு வருடங்களுக்கு 15 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு போட்டிக்கான சம்பளமாக வீரர்களுக்கு 25,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் பட்டியல் இதோ,

இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வாகன், ஸ்வான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், மெக்ராத், ஹைடன், சைமன்ஸ், நியூசிலாந்தின் வெட்டோரி, இலங்கையின் முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககரா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், க்ளூசனர்ஸ், ஜான் டி ரோட்ஸ், ஷான் பொல்லாக், ஆலன் டொனால்டு, மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கர்ட்னி வால்ஷ், கர்ட்லெ அம்புரோஸ்.

இதில் 28 பேர் அணியுடன் கடைசியாக இணைந்திருப்பது நம்ம சேவாக்தான். சமீபத்தில் ஒய்வு அறிவித்த அவரையும் சச்சின் அழைப்பு விடுக்க, வீருவும் கைகோர்த்துவிட்டார். அதே போல ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒய்வு பெற்ற வீரர்களுக்கு நடக்கும் மாஸ்டர் லீக் கிரிக்கெட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் ஷேவாக்.

No comments:

Post a Comment