சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

எனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக் அதிரடி!

எனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை. எனவே, தான் சீசனுக்கு மட்டும் அரசியல் செய்கிறேன் என நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

மருது பாண்டியர் நினைவு தினத்தையொட்டி நேற்று மதுரை வந்த நடிகர் கார்த்திக் மதுரை ஹெரிடேஜ் ஓட்டலில் தங்கியிருந்தார். இன்று காலை சிவகாசிக்கு சென்று சீனப்பட்டாசுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தார். அதற்கு அவரை சிவகாசிக்குள் நுழையக் கூடாது என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் உத்தரவு போட்டு அதன் நகலை கார்த்திக்கிற்கு அனுப்பியது.

இதனால் கொந்தளித்த கார்த்திக் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ''நீங்கள் இப்போது எந்த கட்சியில் இருக்கிறீர்கள் நாடாளும் மக்கள் கட்சியா? காங்கிரசா? பார்வர்ட் ப்ளாக்கா?’’ என்று கேட்டதற்கு,

''நாடாளும் மக்கள் கட்சி சார்பில் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். மாட்டுக்கறி பிரச்னையால் நாடே பிளவுபட்டுவிடும் போலிருக்கிறது. இதற்கு இந்தியன் என்ற முறையில் தலைகுனிகிறேன், நான் எப்பவும் இந்தியத்தமிழன்தான். என்னைப் போன்ற இந்திய தமிழன் இருக்கும் வரை நாட்டை யாரும் பிளவு படுத்த முடியாது.
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார்கள். ஏன் ஒரு நடிகன் ஆளக் கூடாதா, ஏன் அவர்களுக்கு திறமை இல்லையா?
சிவகாசிக்கு என்னை செல்ல விடாமல் போலீசார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். நான் என்ன தீவிரவாதியா? சிவகாசி என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? அங்கு செல்ல பாஸ்போர்ட் வேண்டுமா?

இந்தியாவுக்குள் சீன பட்டாசுகள் இறக்குமதி ஆவது எப்படி? அவை இறக்குமதி செய்யப்படுவது மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாதா? சீன பட்டாசு இறக்குமதியால் சிவகாசி பட்டாசு தொழிலாளர்களின் பிழைப்பும், வருமானமும் பறிபோய் விட்டது'' என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
''உங்கள் தோழி குஷ்பு காங்கிரசில் இருக்கிறாரே, நீங்களும் காங்கிரஸ் கூட்டணியில் சேருவீர்களா?''

‘’குஷ்பு இப்போதும் எனக்கு நல்ல நண்பர்தான். அது வேறு, அரசியல் வேறு. என்னை யார் அழைக்கிறார்களோ அப்போது அதை பற்றி யோசிப்பேன். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளது. அதற்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி வைப்பேன். எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல் போட்டியிட முடியாது. அதுதான் உண்மை.’’

''நீங்கள் ஏன் சீசனுக்கு மட்டும் அரசியல் செய்கிறீர்கள்?''

''எனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை. என்னுடைய முதல் பயணம் சினிமா, அடுத்துதான் அரசியல். அதனால்தான் அப்படி''.


No comments:

Post a Comment