சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Oct 2015

அமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அனுப்பி உதவிய ரஜினிகாந்த்! ( வீடியோ)

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்கும்   வி.ஐ.பி-களை  அழைத்துச் செல்ல 2 சொகுசுப் பேருந்துகளை நடிகர் ரஜினிகாந்த் அனுப்பி வைத்து உதவினார். 
 
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவெடுக்கும் அமராவதி நகருக்கான அடிக்கல் நாட்டு விழா, குண்டூர் அருகே இன்று(வியாழன்) நடந்தது. விழாவில் பொதுமக்கள் மற்றும் தெலுங்கு தேசத் தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக ஆந்திரா மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. தலைநகர் அமையும் இடத்தில் இருந்து தொலைவில் இருக்கும் மாவட்டங்களான அனந்தபுரம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், விசாகப்பட்டினம், கடப்பா ஆகியவற்றில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆந்திர அரசு சார்பில் மட்டும் 5500 பேருந்துகள்  இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தொண்டர்களை அழைத்து வர 5038 பேருந்துகளும், 3 ஆயிரம் சிறிய மற்றும் பெரிய கார்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும் அமராவதிக்கு அருகில் உள்ள குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மட்டும் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன.  

மேலும் விஜயவாடா கன்னசரம் விமான நிலையத்தில் இருந்து விழா மேடைக்கு வி.ஐ.பி.க்களை அழைத்து வர தொழில் அதிபர்கள், பேருந்து அதிபர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்களது சொந்த வாகனங்களை அரசுக்கு இலவசமாக வழங்கினார்கள். 


இதில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் 2 சொகுசு பேருந்துகள்  அனுப்பி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேருந்துகள் அனைத்து வசதிகளும் கொண்டவை. விழாவில் பங்கேற்க நான்கரை லட்சம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இரண்டரை லட்சம் பேர் விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குண்டூர், கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் விழா நடந்த இடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 


No comments:

Post a Comment