சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

பிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு!

மே மாதம்... சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் மாதம். ‘ஹன்ட்டிங் எ குட் ஸ்கூல்’ என்பது, நல்ல மாப்பிள்ளை தேடுவதைவிட சவாலான விஷயமாக மாறிவருகிறது. `கல்வியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும் பள்ளி எப்படி இருக்க வேண்டும்... பள்ளியைத் தேர்வு செய்யும்போது பெற்றோர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன’ என்பவை பற்றி நம்மிடம் பேசினார், சென்னை சிட்லபாக்கத்தில் ‘கேலக்ஸி மான்டிசோரி அகாடமி’ நடத்தி வரும் சந்திரபிரபா. 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான மான்டிசோரி முறை கல்வியில் பல வருடங்கள் அனுபவம் பெற்றவர் இவர்.
‘‘உணவு, உடை, பொம்மை, பொழுது போக்குன்னு எல்லாத்திலும் குழந்தைகளுக்குச் சிறந்ததைக் கொடுக்கும் பெற்றோர்கள், கல்வி விஷயத்திலும் கொஞ்சம் பலமா யோசிக்கணும். எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியான இயல்புகளும் திறமைகளும் கொண்டவங்க இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவங்களுக்கேத்தபடி பள்ளியும் கல்வியும் இருக்கணும். சில குழந்தைங்க கொஞ்சம் சப்போர்ட் தேவைப்படறவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு 10 சதவிகிதம் உதவியும் வழிகாட்டலும் இருந்தாலே போதும்; நல்லா வந்துடுவாங்க. அதைக் கொடுக்கத் தவறும்போது அவங்களுடைய அந்த 10 சதவிகிதத் தேவை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு, பிரச்னை பெரிசாகுது. அப்போ, பெற்றோர்கள் அதைச் சமாளிக்க முடியாம திணறுறாங்க. பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறப்போ, நம்ம குழந்தையின் மேம்பாட்டுக்குத் தேவையானது எல்லாம் இருக்கான்னு பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியம். சரியா பேச்சு வராத குழந்தைகளுக்குப் பேச்சுப் பயிற்சி, பயப்பட்டு அழற குழந்தைகளை அரவணைக்கும் அன்பான சூழல்... இப்படி எல்லாமே தேவை. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே கல்வியைப் புகட்டலாம். ஆனா, ஒரே முறையில் கொடுக்க முடியாது. குழந்தையின் கத்துக்கிற திறன், உள்வாங்கும் சக்தி, ஞாபகசக்தி... இப்படி குழந்தைகளின் அடிப்படை விஷயங்களுக்குக்கேற்பத்தான் ஸ்கூல் செலக்‌ஷன் இருக்கணும்.
‘தி பெஸ்ட்’ என்பது, பள்ளியின் கட்டமைப்பு மட்டும் இல்லை. ஏ.சி கிளாஸ்ரூம், வெளிச்சுவரில் கலர் கலராக கார்ட்டூன் பெயின்ட்டிங்ஸ், டெக்னாலஜி வசதிகள்... இவை மட்டுமே ‘தி பெஸ்ட்’டுக்கான தகுதிகள் இல்லை. குழந்தைகளுக்கு அந்த வசதிகள் எல்லாம் எந்த வகையில் உபயோகப்படுதுன்னு பார்க்கணும். குழந்தைகளுக்கு இயற்கையாகவே கத்துக்கிற திறன் இருக்கு. அதுக்கு உதாரணம், எந்த வகுப்பும் இல்லாம, பேசிப் பேசியே நம்ம தாய்மொழியை அவங்க கத்துக்கிறதில்லையா? குழந்தைகளை நல்லா பேசவிடணும். பேச ஆரம்பிக்கும்போதே, ‘ஷட் அப்!’னு அதட்டினா, அந்தக் குழந்தை எப்படிப் பேசும்? கருத்துப் பரிமாற்றத்துக்கு, நல்லா பேசவிடணும். அப்போதான், பெரிய பசங்களா வர்றப்ப, க்ரூப் டிஸ்கஷன்ல அந்தக் குழந்தையால் பேச முடியும். ஆரம்பத்திலேயே அதை முறிக்கும் பள்ளியால், எப்படி தன்னம்பிக்கை கொடுக்க முடியும்? குழந்தைகளின் அந்த உற்றுநோக்கும் - உள்வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டுதான் கல்வி இருக்கணும்.’’ என்ற சந்திரபிரபா, பள்ளிகளில் கவனிக்க வேண்டிய அடிப்படைத்  தேவைகளைப் பட்டியலிட்டார்...
‘‘குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கப் போகும்போது, பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு, தயங்காமல் உள்ளே போய் டாய்லெட் சுத்தமா இருக்கா, குழந்தைகளுக்கு வசதியான அமைப்புல இருக்கானு பார்க்கணும். சில பெற்றோர் டயாப்பர் போட்டே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புறாங்க. அதைக் கண்டிப்பா தவிர்க்கணும். குழந்தைக்கு இரண்டரை வயதில் அட்மிஷன் கொடுக்கும் பள்ளிகள், டாய்லெட்டிங்குக்கும் பொறுப்பெடுத்துக்கணும். குழந்தை எப்போதெல்லாம் டாய்லெட் போகிறது என்பதைத் தெரிஞ்சுகிட்டு, பெற்றோர்களின் உதவியோடு குழந்தைகளைப் பழக்கணும்.
வேலைக்குச் செல்லும் பெற்றோர்... பள்ளியும், டே கேர் வசதியும் ஒரே இடத்தில் இருக்கும் பள்ளிகளைக் கூடியவரை தவிர்க்கணும். குழந்தைக்குள் அது பெரிய குழப்பத்தை உண்டாக்கும். காலை 9 முதல் 12 வரை பள்ளி மாதிரி விதிகள்... அதுக்கப்புறம் வீடு மாதிரி சுதந்திரம்... ஆனா, ஒரே நபர்தான் பார்த்துக்குவாங்க. இது குழந்தையைப் பாதிக்கும்.
சில பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடலைன்னா, ஆசிரியைகள் ஊட்டிவிடறாங்க. இதைப் பழக்கப்படுத்திடக் கூடாது. அவங்களே தனியா, தங்களோட பசிக்குத் தேவையானதை எடுத்துச் சாப்பிடப் பழக்கணும். அதுக்கு சில முறைகளை பயன்படுத்தலாம். எங்க பள்ளியில் ‘நான் கதை சொல்றேன்.. நீங்க கேட்டுக்கிட்டே சாப்பிட்ருவீங்களாம்!’னு சொல்லி சாப்பிட வைப்போம்.
பெற்றோர்களும் குழந்தை சாப்பிடும் அளவைப் பொறுத்து, அளவாக உணவை அனுப்பணும். டப்பாவை நிறைச்சு அடைச்சு, ‘ஸ்கூல்ல மிரட்டி சாப்பிட வெச்சிடுவாங்க’ன்னு நினைக்கக் கூடாது.


No comments:

Post a Comment