சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

எஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த விதவைப் பெண்! !

காவலர் பணி ஒதுக்கீட்டு பிரிவில் அனுமதி மறுக்கப்பட்ட விதவைப் பெண் பூங்கோதைக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பூங்கோதை, இரண்டாம் கட்ட தேர்வில் தகுதி பெறவில்லை. ஆனாலும், திருமணம் ஆன பெண்களுக்கு காவலர் பணியில் இடஒதுக்கீடு இருக்கிறது என்ற உரிமையை பெற்றுத் தந்துவிட்டார் பூங்கோதை.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் பூங்கோதை(29). இவரது தந்தை லட்சுமணன் செய்யூர் காவல் நிலையத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணமாகி ஒரு வருடத்தில் கணவரை இழந்த நிலையில், தந்தையுடன் வசித்து வருகிறார் பூங்கோதை.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் 1,078 காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடத்தப்பட்டது. மே மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடை பெற்றது. 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வில், காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார் பூங்கோதை. காவல்துறையை சேர்ந்தவரின் வாரிசுதாரர் பிரிவிலும் மற்றும் கணவரை இழந்தவர் என்பதால் கைம்பெண் பிரிவிலும் என இரண்டு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவின் கீழ் 77 பெண்கள் உள்பட 106 பேர் தேர்வாகினர். இதில் பூங்கோதையும் ஒருவர்.

காவலர் பணி ஒதுக்கீடு பிரிவில் தேர்வான 48 நபர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. ஆனால் தமிழ்நாடு சீருடை பணியாளர் அறிவித்த தேர்வு பட்டியலில் இவரின் பெயர் இல்லை. இதனால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் அலுவலகத்தில் முறையிட்டார் பூங்கோதை.
 
"நாங்கள் கைம்பெண் பிரிவின் கீழ்தான் உங்கள் விண்ணப்பத்தை பரிசீலிப்போம். நீங்கள் எடுத்த மதிப்பெண் கட் ஆஃப் மதிப்பெண்ணுக்குள் வரவில்லை. அதனால் உடல் தகுதி தேர்விற்கு உங்களை பரிந்துரைக்கவில்லை" என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தரப்பில் பதில் அளித்தனர். அப்போது, "என்னை வாரிசுதாரர் என்ற அடிப்படையில் பரிசீலனை செய்தால் எனக்கு தகுதி கிடைக்குமா?" என்று கேட்டார் பூங்கோதை. ‘வாரிசுதாரர் என்றால் வரும். ஆனால் உங்களை நாங்கள் விதவை என்ற தகுதி அடிப்படையில்தான் பரிசீலிப்போம்’ என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பூங்கோதை வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 226ன் கீழ் என்னுடைய உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. வாரிசுதாரர் பிரிவிற்கு நான் தேவையான மதிப்பெண் எடுத்திருந்தாலும், என்னை தன்னிச்சையாகவே கைம்பெண் 'கோட்டா' ( quota ) வில் மட்டும் எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்கின்றனர். நான் ஒரு பெண். எனக்கு வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று  குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி பி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், ‘மனுதாரருக்கு வார்டு 'கோட்டா' வில் மனுவை பரிசீலனை செய்ய வேண்டும். அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. இவர்களுக்கென்று தனியாக ஒருமுறை உடல் தகுதி தேர்வு நடத்தி, அதில் அந்த பெண் தேர்வு பெற்றால், அவரை நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பூங்கோதைக்கு தகுதித் தேர்வு நடத்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. மேலும் அதன் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அனுப்பும்படி கூறியிருந்தது. இதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை அஞ்சுகம் அரங்கில் பூங்கோதைக்கு நேற்று உயரம், எடை மற்றும் 400மீ ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது. முதற்கட்ட தேர்வில் அவர் தகுதிபெற்றார்.

இன்று  நீளம் தாண்டுதல், பந்து எறிதல் மற்றும் 200 மீ ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. முதலில் நீளம் தாண்டுதல் வைக்கப்பட்டது. இதில் பூங்கோதை தகுதி பெறவில்லை. 

இது குறித்து பூங்கோதை கூறுகையில், தோல்வி அடைந்துவிட்டேன் என்று வருத்தப்படவில்லை. திருமணம் ஆன பெண்களுக்கு காவலர் பணியில் இடஒதுக்கீடு இருக்கிறது என்ற உரிமையை பெற்றுத் தந்துவிட்டேன்" என்று கூறினார்.


No comments:

Post a Comment