சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Oct 2015

ஸ்டாலினை பின்தொடர்ந்த அதிமுக...!

'நமக்கு நாமே விடியல் மீட்பு' பயணமாக நேற்று தஞ்சாவூர் வந்தார் ஸ்டாலின். அவர் வந்துசென்ற இடங்களில் அடுத்த அரை மணி நேரத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட, அ.தி.மு.க.வின் சாதனைகளை காட்சிகளைச் சொல்லும் பிரசார வாகனம் வந்து காட்சிகளை திரையிட்டதால் பரபரப்பு நிலவியது.
ஜெயலலிதா தலைமையிலான நான்கரை ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்வதற்காக, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மெகா சைஸ் எல்.இ.டி திரை கொண்ட வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வேனை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் மக்கள் கூடும் இடங்களில் நிறுத்தி ஜெயலலிதா கலந்துகொண்டு வழங்கிய நலத்திட்ட உதவிகளை காட்சிகளாக, பாடல்களுடன் ஓடவிட்டு வருகிறார்கள். தற்போது அந்த வேன் தஞ்சாவூர் பகுதிகளில் சுற்றி வருகிறது.

நேற்று நமக்கு நாமே பயணத்தில் தஞ்சாவூரில் இருந்தார் ஸ்டாலின். அவர் நடைபயணம் செய்த இடங்கள் மற்றும் அவர் சென்ற வழிகளில் இந்த வேன் மூலம் மும்முரமாக சுற்றி காட்சிகளை ஓடவிட்டனர் அந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள். இந்தச் சம்பவம் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ''தளபதி ஸ்டாலினின் விடியல் மீட்புப் பயணத்துக்கு 15-ம் தேதி தஞ்சாவூர் வருகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விளம்பரமும் செய்யபட்டது. ஆனால், அவர் வருவதற்கு முதல் நாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உத்தரவின் பேரில் அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில்,  நகர் முழுக்க அ.தி.மு.க.வினர் பெரிய சுவரொட்டிகளை ஒட்டினர். ஸ்டாலின் செல்லும் சாலைகளில் மெகா சைஸ் ஃப்ளெக்ஸ் போர்டும் வைத்தனர். அரசியல் நாகரீகம் கருதாமல் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் இப்படி செய்தது எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் ஸ்டாலின் சென்ற இடங்களில் ஜெயலலிதா சாதனைகளை சொல்லும் வேன் வந்து காட்சிகளை ஓடவிடப்பட்டது. மக்கள் கூடும் இடங்களில் விளம்பரம் செய்யாமல், எங்கள் உடன்பிறப்புகள் கூடியிருந்த இடங்களில் ஏன் இவர்கள் திரையிட  வேண்டும்? ஸ்டாலின் வருவதை எங்கள் தலைமையினர் முதல் நாளே வேன் மூலம் பிரசாரம் செய்வார்கள். எங்கள் வேன் வந்து சென்ற சற்று நேரத்தில்  செய்தி மக்கள் தொடர்புத் துறையினரின் பிரமாண்ட வேன் அந்த இடத்துக்கு வந்து பிரசாரம் செய்தது. இது எல்லாம் வைத்திலிங்கத்தின் தூண்டுதலின் பேரிலேயே நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்'' என்றனர்.

மேலும் சிலரோ, ஸ்டாலின் சென்ற இடங்களில் எல்லாம் அ.தி.மு.க.வினரின் ஃப்ளெக்ஸ் மற்றும் போஸ்டராக இருப்பதைப் பார்த்து அவரே கோபத்துடன் சென்றதாக கூறபடுகிறது. 

அ.தி.மு.க.வினரோ, "அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகிகளுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கினார் ஜெயலலிதா. அதை கொண்டாடவே இந்த பிரமாண்ட ஏற்பாட்டைச் செய்தோம். மற்றபடி ஒன்றும் இல்லை" என மழுப்பலாக சொன்னார்கள். 

தி.மு.க-வின் கோட்டையாக இருந்த தஞ்சை இப்போது அ.தி.மு.க வசம். அதை தக்க வைத்துக்கொள்ள இப்போதே போட்டிக்கு தயாராகி விட்டனர் அ.தி.மு.க.வினர்.

No comments:

Post a Comment