சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Oct 2015

நயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குணங்கள்!

தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் ஹிட்களால் லைக்ஸ் குவித்துக் கொண்டிருக்கிறார்  நயன்தாரா.  இப்போதைக்கு தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோயின் அவர்தான்.  ஆன் ஸ்க்ரீன், ஆஃப் ஸ்க்ரீன்... இரண்டிலும் நயன்தாரா ஏன் ஹிட்..? 
இந்த 11 கெத்து குணங்கள்தாம்.!
1) சின்சியர்  குயின்
வாழ்க்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்த போதும் வேலையில்  நயன் எப்போதும் கில்லி. தனது சொந்த பிரச்னைகள் படப்பிடிப்புகளில் தன் கவனத்தைக் கலைக்காமல்  பார்த்துக் கொள்வார். ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டால் நயனின் கவனம் அதில் மட்டுமே..

2) பவர் பெர்ஃபார்மர்
வெறும் கிளாமர் டாலாக வந்து செல்பவரல்ல நயன். நடிப்புதான் தொழில் என ஆனபின், தன்னை ஒரு தேர்ந்த நடிகையாக உருமாற்றிக் கொண்டே இருக்கிறார்.  அதனால் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அவரைத் தேடி வந்தன. அப்படி வந்ததை கச்சிதமாக பிடித்துக் கொள்வார் நயன். இந்த ஆண்டு பேய் ஹிட் அடித்த மாயா அப்படி வந்ததுதான். படத்தின் இயக்குநர் ஆண்ட்ரியாவை நடிக்க வைக்கத்தான் நினைத்திருந்தார். ஆனால், பேச்சுவாக்கில் கதையைக் கேட்ட நயன், சம்பளம் பற்றி அலட்டிக்கொள்ளாமல்  உடனடியாக அந்த புராஜெக்ட்டில் தன்னை இணைத்துக் கொண்டார். 
3) தில் லேடி
ஓடி ஒளிவது நயனுக்கு எப்போதும் பழக்கமில்லை. எதையும் நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகவே இருக்கிறார். அந்த தைரியம் தான் நயனின் பலம் என்கிறார்கள் அவர் நலன் விரும்பிகள். ’உங்கள் அழகு எது’ என ஒரு பேட்டியில் கேட்டபோது நயன் சொன்ன பதிலும் அதுதான் “என் தைரியம்”!

4) வைரல் ரீச்
நயனின் சொந்த ஊர் கேரளா. நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். ஆனால், தெலுங்கு, தமிழ், கன்னடம் என  மூன்று மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, ‘நம்ம பொண்ணு’ என எல்லா மாநிலங்களிலும் ஒரு பிரியம் இருப்பதால், நயன்  நடிக்கும் படங்களுக்கு நாலு மாநிலங்களிலும் வைரல் ரீச் கிடைக்கும்.

5)  தொழில் வேறு நட்பு வேறு
நயன்தாராவுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. சினிமாவையும் பர்சனல் வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ள மாட்டார். சிம்புவுடன் பிரச்னை. ஆனால் அதனால் அவருடன் நடிக்க மாட்டேன் என அவர் மறுக்கவில்லை.

6) க்யூட்டி பியூட்டி
சில நடிகைகள் மட்டுமே எல்லா உடைகளிலும் பார்க்க அழகாய் இருப்பார்கள். நயனுக்கு அந்த அதிர்ஷ்டம் உண்டு. சேலை முதல் பிகினி வரை எல்லா உடைகளிலும் நயன் வந்திருக்கிறார். ஆனால் முகம் சுளிக்க வைத்ததே இல்லை. அந்த ரசனைதான் நயனை ரசிகர்களிடம் நிலைக்க வைத்திருக்கிறது.

7) பெஸ்ட் கேர்ள்ஃப்ரெண்ட்
நயன்தாராவுக்கு இண்டஸ்ட்ரி முழுக்கவே நல்ல நண்பர்கள் உண்டு. அவர்களுக்காக நிறைய செய்திருக்கிறார் நயன். அவர்களும் தக்க சமயத்தில் அவருக்கு உதவி இருக்கிறார்கள். மீண்டும் நடிக்க வந்தபோது முன்னணி நடிகர்கள் பலர் அவருடன் நடிக்கத் தயாராக இருந்தார்கள். அஜித்துடன் ஆரம்பம், ஆர்யாவுடன் ராஜா ராணி போன்ற கம் பேக் படங்கள் அப்படி அமைந்ததுதான்.

8) வெட்டி பந்தா வேஸ்ட்
தனது ரீச் என்ன என்பது அவருக்குத் தெரிந்தாலும் அடக்கமாகவே இருப்பார். வெட்டி பந்தா என்பதே நயனிடம் கிடையாது என்பது கோலிவுட் டாக். தொலைக்காட்சி பேட்டிகளிலும் அது வெளிப்படையாகவே தெரியும். மனதுக்கு கஷ்டமான கேள்விகள் என்றாலும் கொஞ்சம் உறுதியான பதில்கள் கிடைக்குமே தவிர, பந்தாவோ, வெறுப்போ இருக்காது.
9) தனி ஒருத்தி
பொதுவாக நடிகைகள் பலர் சினிமா குடும்பத்தில் இருந்தோ, மாடலிங் துறைகளில் இருந்தோ வருவதுண்டு. ஆனால் நயன் எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து ஜெயித்தவர்.  அது அவரது ப்ளஸ்களில் ஒன்று!
10) காசு பணம் துட்டு முக்கியமில்லை
இப்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நயனின் சம்பளம் கோடிகளில் என்கிறார்கள். ஆனால் மலையாள இண்டஸ்ட்ரியில் ஹீரோக்களுக்கே அது கிடைப்பதில்லை. அது சின்ன மார்க்கெட். ஆனால், மலையாளப் படங்களில் வாய்ப்புகள் வந்தால் தவறாமல் நடிப்பார் நயன். சம்பளமும் சில லகரங்கள் தான். பணம் தனது அடையாளத்தை தீர்மானிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

11) பாசிட்டிவ்  பலன்கள் மட்டுமே
“பிரபுதேவாவுடன் காதலில் இருந்த போது ஒருநாள் இது பிரேக் அப் ஆகும் நினைத்தீர்களா?” என நயனிடம் கேட்டார்கள். “நான் எந்த வேலை செய்யும்போதும் நெகட்டிவாக நினைக்க மாட்டேன். அதன் நல்லதை மட்டுமே பார்ப்பேன்” என்றார். அதுதான் நயன். எப்போதும் பாசிட்டிவ்வாக யோசிப்பார். அது தவறிப்போனாலும் அதில் அவருக்கு கிடைத்த பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்வார். வருந்த மாட்டார்!


No comments:

Post a Comment