சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Oct 2015

கண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா?

தேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளைதான் தேடலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம்.
ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா?எல்லாம் தெரியும், ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு சவால் விட முயன்ற பல தேடியந்திரங்கள் மண்ணைக்கவ்வி விட்ட நிலையில் டக்டக்கோ இன்னமும் தாக்கு பிடித்திருக்கிறது என்பது மட்டும் அல்ல; இணைய தேடலில் தனக்கென தனி இடத்தையும் பிடித்திருக்கிறது.

மாற்று தேடியந்திரம்!

இன்னமும் கூகுள்தான் தேடலின் முடிசூடா மன்னனாக இருக்கிறது என்றாலும், பல இணையவாசிகள் டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். இப்படி மாறியவர்கள் டக்டக்கோ தரும் அனுபவம் சிறந்ததாக இருக்கிறது என சான்றிதழும் அளிக்கின்றனர்.
இது கொஞ்சம் ஆச்சர்யம் தான். கூகுள் தேடலின் எளிமை மற்றும் வல்லமைக்கு பழகியவர்கள் இன்னொரு தேடியந்திரத்தை பாராட்டுவது என்பது அரிதானதுதான். ஆனால் கூகுள் தேடலுக்கு பழகியவர்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் டக்டக்கோ தேடியந்திரம் புதுமையான பல அம்சங்களை கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல, டக்டக்கோ ஏற்கனவே உள்ள அம்சங்களை மெருகேற்றி வருவதுடன் புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ தரும் அனுபவத்தை பார்ப்பதற்கு முன்னர்,  இந்த தேடியந்திரத்திற்கு மாறுவதற்காக பலரும் கூறும் காரணத்தை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்- டக்டக்கோ உங்களை கண்காணிப்பதில்லை என்பதுதான் அந்த காரணம்!.

காண்காணிப்பில் இருந்து விடுதலை!

ஆம், டக்டக்கோவின் சிறப்பம்சம், இணையவாசிகளின் எந்த ஒரு அசைவையும் கண்காணிக்காமல் நல்லதொரு தேடியந்திரமாக இருப்பதுதான். கண்காணிப்பு என்னும் போது, இணையவாசிகள் என்ன தேடுகின்றனர், எந்த வகையான இணையதளங்களுக்கு செல்கின்றனர்? இணையதளத்தில் என்ன பொருட்களை வாங்குகின்றனர்? என்பது போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளமால் இருப்பதை குறிக்கிறது. இது அனைத்தையும் கூகுள் செய்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

கூகுள் தேடல் சாம்ராஜ்யமே அதன் விளம்பர வருவாயில்தான் இருக்கிறது. இந்த விளம்பர வருவாய் எப்படி வருகிறது? உங்களைப்போன்ற இணையவாசிகள் மூலமாகதான். இணையவாசிகளின் தேடலை கண்காணித்து அவர்கள் தேடும் பதங்களுக்கு பொருத்தமான விளம்பரங்களை, தேடல் முடிவுகள் அருகே இடம் பெற வைத்து, அதன் மூலம் கூகுள் வருமானம் ஈட்டுகிறது. இவ்வளவு ஏன், உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் மெயில்களை கூட கூகுள் படிப்பதை, உங்கள் மெயில் வாசகங்களுக்கு அருகிலான விளம்பரங்கள் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்த கண்காணிப்பு,  இணையவாசிகள் தனியுரிமையை மீறாத வகையில் அவர்களை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாமல் மேற்கொள்ளப்படுகிறது என கூகுள் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இணையவாசிகளின் தேடல் அனுபவத்தை மேம்படுத்தவும் இந்த விவரங்கள் தேவைப்படுவதாக கூகுள் கூறுகிறது.

ஆனாலும் என்ன... கூகுள்,  இணையவாசிகளின் தேடலை கண்காணிக்கிறது என்பதே விஷயம்.

தேடல் குமிழ் சிறை 

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.  கூகுளின் தேடல் முடிவுகள் எல்லோருக்கும் பொதுவானது இல்லை தெரியுமா? ஒருவர் எந்த வகையான தேடல் முடிவுகளை பயன்படுத்துகிறார் என்பதன் அடிப்படையில் அவரவருக்கு என்று பொருத்தமான தேடல் முடிவுகளை கூகுள் முன்வைக்கிறது. ஆக, கூகுள் மூலம் நீங்கள் ஏற்கனவே விஜயம் செய்த இணையதளங்களின் அடிப்படையில் உங்களுக்கான தேடல் முடிவு அமையும். கூகுள்,  இதை இணையவாசிகளின் தேவைக்கேற்ப பிரத்யேகமான முடிவுகளை அளிப்பது என்கிறது. ஆனால் இதன் இன்னொரு பொருள் , இணையவாசி தேடிய பதத்திற்கு பொருத்தமான பொதுவான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதில், கூகுளால் வடிகட்டப்பட்ட தேடல் முடிவுகளை காண  நேருகிறது என்பதுதான். இந்த அம்சம் தேடல் குமிழ் என குறிப்பிடப்படுகிறது.
கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று இந்த வசதியை முடக்கி, பொதுவான தேடல் முடிவுகள் தோன்றும் படி செய்யலாம்தான். ஆனால் பெரும்பாலானோர், தேடல் குமிழ் என்ற ஒன்று இருப்பதையே அறியாதவர்களாக இருக்கின்றனர் எனும் போது அதை நீக்குவதற்கு கூகுள் மறைத்து வைத்திருக்கும் வசதியை எப்படி அறிந்திருக்க முடியும்?


விளம்பர உலகம் 

நிற்க! இது கூகுள் மீது புகார் வாசித்தல் அல்ல; இன்றைய இணைய உலகம் இப்படிதான் இருக்கிறது. ஃபேஸ்புக் உள்ளிட்ட பல முன்னணி இணைய சேவைகள், வருவாய்க்காக இது போன்ற வழிகளைதான் பின்பற்றுகின்றன.

இந்த காரணங்களினால்தான் டக்டக்கோவை அறிந்தவர்கள் அதை தலையில் வைத்துக் கொண்டாட தயாராக இருக்கின்றனர். ஏனெனில் கூகுள் போல டக்டக்கோ,  இணையவாசிகளின் தேடல் செயல்பாடுகளை கணகாணிக்காமல் இருக்கிறது. இணையவாசிகள் தேடல் மூலம் அது விளம்பர வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை. (டக்டக்கோவில் விளம்பரம் உண்டு; ஆனால் அதை இல்லாமல் செய்யும் வசதியும் இருக்கிறது).
உங்களை கணகாணிக்காத தேடியந்திரம் என்ற வாசகத்துடன் டக்டக்கோ தன்னை முன்னிறுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்தது. இதனிடையே அமெரிக்க விசுலூதி ( whistleblower ) எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்கா எப்படி இ-மெயில் உள்ளிட்டவற்றை உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்தி,  தனியுரிமை மீறல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு,  டக்டக்கோ தேடியந்திரத்தின் கண்காணிக்காத தன்மைக்காக பலரும் அதன் பக்கம் சாய்ந்துள்ளனர்.
எனவே, தேடல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படாத தேடல் அனுபவத்தை நீங்கள் விரும்பினால் டக்டக்கோ நல்ல மாற்று!.

சரி, ஒரு தேடியந்திரமாக டக்டக்கோவின் செயல்பாடு எப்படி?

டக்டக்கோவும், கூகுள் போலவே எளிமையான முகப்பு பக்கத்துடன் தேடல் சேவை அளிக்கிறது. தேடலுக்கான் குறிச்சொல்லை டைப் செய்தவுடன், பொருத்தமான தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. தேடல் பட்டியலுக்கு மேல்,  தேடல் பதம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் சுருக்கமான அறிமுகங்களை பார்க்கலாம். பல நேரங்களில் இவை நீங்கள் தேடும் பொருளுக்கு தொடர்புடைய பலனுள்ள தகவல்களாக இருப்பதை உணரலாம்.
இணைய பக்கங்கள் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள், விளக்கங்கள் மற்றும் செயலிகளுக்கான பகுதிகள் இருப்பதையும் பார்க்கலாம்.தேடல் முடிவுகளுக்கு மேல் தோன்றும் பலவகை கட்டங்கள் கூடுதல் விவரங்களாக அமைந்திருப்பதையும் உணரலாம்.
அடிப்படை தேடல் அனுபவம் எப்படி இருக்கிறது என பயன்படுத்திப்பாருங்கள்.
ஆனால் வழக்கமான தேடல் தவிரவும் டக்டகோவிடம் அநேக அம்சங்கள் இருக்கின்றன.அவைதான் பயனாளிகளை கவர்ந்திழுத்து வருகின்றன.


அசத்தலான ஐபேங்!

இந்த அம்சங்களில் முதலில் வருவது ஐபேங்க்ஸ் வசதி. அதாவது டக்டக்கோவில் தேடாமலேயே நீங்கள் விரும்பும் இணையதளங்களுக்கு நேராக தாவிச்சென்றுவிடலாம். உதாரணத்திற்கு விக்கிப்பீடியா தளத்தில் ஒரு தகவல் தேவை என்றால், தேடல் பத்ததை டைப் செய்து, அதனுடன் விக்கிபீடியா பெயரையும் சேர்த்து டைப் செய்ய வேண்டாம். இதற்கு பதிலாக விக்கிபீடியாவில் தேட உள்ள பதத்தை டைப் செய்து,  அதற்கு முன்னதாக ஒரு அடைப்புக்குறி மற்றும் டபிள்யு எனும் எழுத்தை டைப் செய்தால் போதும் நேராக அந்த தளத்திற்கு சென்று விடலாம்.

இதே போல மின்வணிக தளமான அமேசானில் ஏதாவது தேட விரும்பினால், அடைப்புக்குறி மற்றும் ஏ எனும் எழுத்தை டைப் செய்தால் போதும். இந்த வசதிதான் ஐபேங் என குறிப்பிடப்படுகிறது. இப்படி 6,000 க்கும் மேற்பட்ட ஐபேங் வசதி இருக்கிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதோடு, நீக்களும் கூட உங்களுக்கு விருப்பமான ஐபேங் வசதியை பரிந்துரைக்கலாம்.
இந்த அம்சத்தை பயன்படுத்த கொஞ்சம் பயிற்சி தேவை. ஆனால் டக்டக்கோ தரும் ஐபேங் பட்டியலை சிலமுறை பயன்படுத்தி பார்த்தால் இதன் பயன்பாடும் ,சுவாரஸ்யமும் உங்களை ஈர்க்கும்.

உங்களிடம் அதிகாரம்
அதே போல டக்டக்கோ தேடியந்திரத்தில் இணையவாசிகள் தங்கள் இஷ்டம்போல அதன் அம்சங்களை மாற்றிக்கொள்ளலாம். டக்டக்கோ அளிக்கும் உடனடி பதில்கள் பிடிக்கவில்லையா? அவற்றை நீக்கி விடலாம். தேடல் முடிவுகளின் எழுத்துரு, பின்னணி வண்ணம் போன்றவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். தேடியந்திரம் செயல்படும் பிராந்தியம் மற்றும் அதில் உள்ள மொழியையும் மாற்றிக்கொள்ளலாம்.
இதே போல விளம்பரங்களையும் வேண்டாம் என சொல்லலாம். ஆனால் அதற்கு டக்டக்கோவை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தால் போதுமானது.

இணையத்தில் கீ போர்டு குறுக்கு வழிகள் இருப்பது போல டக்டக்கோவில் தேடலுக்கான கீ போர்டு குறுக்கு வழிகளும் இருக்கின்றன.தேடல் முடிவுகளில் மேலும் கீழும் செல்ல, கீ போர்டு அம்புக்குறியை பயன்படுத்தலாம். அதன் பிறகு என்டர் விசையை அழுத்தினால் குறிப்பிட்ட இணையதளம் திறக்கப்படும். ஆக, மவுஸ் மீது கைவைக்காமலேயே இணையத்தில் உலாவலாம்.

டக்டக்கோவுக்கான  தேடியந்திர முகவரி:
https://duckduckgo.com/

No comments:

Post a Comment