சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

ஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள் அதிச்சி! (வீடியோ)

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் இருந்து 101 பயணிகளுடன் வெனிசுலாவுக்கு புறப்பட்ட டைனமிக் இன்டர்நேஷனல் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் ஓடியபோது திடீரென தீப்பிடித்து எரிந்தால் உள்ளே இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லவ்டர்டேல் விமான நிலையத்தில் இருந்து (உள்ளூர் நேரப்படி) நேற்று மதியம் 12.30 மணியளவில் 101 பயணிகள், உட்பட விமானக்குழுவினருடன் வெனிசுலாவின் தலைநகரமான காரகாஸ் நோக்கி டைனமிக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-200ER ரக விமானம் புறப்பட்டது.
இந்த விமானம், ஓடு பாதையில் சுற்றி வட்டமடித்து வேகம் எடுத்தது. அப்போது, விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியான திடீர் தீ, மள மளவென விமானத்தின் மையப்பகுதிக்கு பரவியது. தீ கொளுந்துவிட்டு எரிய, புகை மண்டலத்துடன் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தைக் கண்ட கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.
அதே நேரம், விமானத்தில் தீ பற்றியதை அறிந்துகொண்ட விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துக் கொண்டே விமானத்தின் வேகத்தைக் குறைந்தபடி சில நொடிகளுக்குள் விமானத்தை நிறுத்தினார். உடனே அந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்து வந்தன. விமானத்தின் அவசரக்கால கதவுகள் திறக்கப்பட்டு அவ்விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் 12.37 மணிக்குள் பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.
மேலும், விமானத்தின் அவசரக் கதவுகள் திறக்கப்பட்டதும், புகை உள்ளே புகுந்ததால் சில பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டனர். வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலம் விமான நிலைய கட்டிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 விமானத்துக்குள் ஏறிய மீட்புப் படையினர் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்ட நிலையில், தீயணைப்பு படையினர் தீயை சில நிமிடங்களுக்குள் அணைத்து அந்த விமானம் வெடித்து சிதறும் ஆபத்தை தவிர்த்தனர். மேலும், 27 வருடங்களாக இயங்கி வரும் இந்த விமானத்திலிருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என்றும், இது குறித்து விமானக் குழுவினரை ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment