சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

சொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைத்தார்!

நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை தொடர்பான வரவு, செலவு கணக்குகளை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தியிடம், முன்னாள் தலைவர் சரத்குமார் ஒப்படைத்துள்ளார்.
 
நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சரத்குமார் தலைமையிலான அணி தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து பத்து நாட்களில் நடிகர் சங்கத்தின் கணக்குகளை ஒப்படைத்துவிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதனிடையே, கடந்த 25ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், சங்கத்தின் கணக்குகளை சரி பார்க்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்ய சிறப்பு தணிக்கை குழுவை நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்தநிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோரை சந்தித்து பேசிய சரத்குமார், சங்கம் மற்றும் அறக்கட்டளைக்கான கணக்கு புத்தகங்களை ஒப்படைத்துள்ளார். அப்போது, பூச்சி முருகன் உள்பட சிலர் தேவையில்லாமல் என்னை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சரத்குமார் கூறியதாக தெரிகிறது. 

நடிகர் சங்க கணக்குகளை பத்து நாட்களுக்குள் ஒப்படைப்பேன் என்று சரத்குமார் சொன்னதுபோல் சங்கத்தின் கணக்கு புத்தகங்களை ஒப்படைத்துள்ளார்.

No comments:

Post a Comment