சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

வரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதாக்கள்!

வேலுநாயக்கராக வந்த கமல்ஹாசனை எல்லோருக்கும் தெரியும். 'நாயகன்' கதைக்கு கருவாக
 இருந்தவர்தான்  மும்பையின் பிரபல டான் வரதாபாய் என்ற வரதராஜ முனுசாமி முதலியார்.  இப்போதைய மும்பை நிழலுக தாதாக்கள் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், சோட்டா சகீல் போன்றவர்களுக்கெல்லாம் இவரும், ஹாஜி மஸ்தான் என்ற மற்றொரு தமிழரும்தான் முன்னோடிகள்.
              நடிகர் திலீப்குமார்,  அவரது மனைவி சாயீரா பானுவுடன் மஸ்தான் 
மஸ்தான் ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர். ஆனால் இவர்களது 'தாதா வாழ்க்கை' தாங்கள் சார்ந்த தமிழ் சமுதாயத்தை காக்கவே பெரும்பாலும் உதவியதாக சொல்லப்படுவதுண்டு.

தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் பிறந்த வரதராஜ முதலியார், 1960-ம் ஆண்டுவாக்கில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதேவேளையில் ஹாஜி மஸ்தான் மும்பை கிராஃபோர்ட் மார்க்கெட்டில் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். பின்னர் மும்பை துறைமுகத்தில் போர்ட்டராக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது ராஜன் மகாதேவ் நாயர் என்பவரும் மும்பையில் தாதாவாக இருந்தார். படாராஜன் என்று அழைக்கப்பட்ட இவரது கும்பலில்தான் முதலில் சோட்டா ராஜன் இருந்து வந்தான். அந்த காலக்கட்டத்தில் மும்பையை பொறுத்த வரை இவர்கள் மூன்று பேரும் வைப்பதுதான் சட்டமாக இருந்துள்ளது. 

ஹாஜி மஸ்தானும், வரதாபாயும் தமிழர்கள் என்ற வகையில் நெருங்கிய நண்பர்கள். தாராவி, சயான், மாதுங்கா பகுதியில் உள்ள தமிழ் மக்களிடம் வரதாபாய் ஹீரோவாகவே வலம் வந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை துறைமுகத்தையே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இதனால் கடத்தல் தொழில் மூலம் பணம் கோடி கோடியாக கொட்டத் தொடங்கியது. ஒரு காலக்கட்டத்தில் சிவசேனாவிடம் இருந்து தமிழர்களை காக்கவும் வரதாபாயின் தாதா அடையாளம் உதவியது.
                                                                      வரதராஜ முனுசாமி முதலியார்
ஹாஜி மஸ்தான் பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், மும்பையின் பெரும் தொழிலதிபர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தங்கம், வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தலிலும் மோடி மஸ்தானுக்கு பணம் கொட்டியது . வெள்ளை நிற பேண்ட், சட்டை அணிவது ஹாஜி மஸ்தானுக்கு பிடித்தமானது. 'மெர்சிடஸ் பென்ஸ்' காரில்தான் பயணிப்பார். வெளிநாட்டு சிகரெட்டுகளைதான் புகைப்பார். 

கடந்த 2010-ம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான  ஒன்ஸ் அபான் அ டைம்ஹிந்திப் படம்,    மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். அமிதாப்பச்சன் நடித்த தீவார்  படமும் ஹாஜி  மஸ்தானை மையமாகக் கொண்டு வெளிவந்ததுதான். 

இவர்கள் இருவரது தாதா வாழ்க்கையை, 1980-ம் ஆண்டு மும்பை போலீஸ் முடிவுக்கு கொண்டு வந்தது. வரதாபாயின் கும்பலில் இருந்த பலருக்கும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதோடு வரதாபாயை என்கவுண்டர் செய்யவும் மும்பை போலீஸ் முடிவு செய்தது. இதனையடுத்து மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த வரதாபாய், அமைதியாக வாழத் தொடங்கினார். ஆனால் ஹாஜி  மஸ்தான் தொடர்ந்து மும்பையில்தான் இருந்தார். 

கடந்த  1988-ம் ஆண்டு சென்னையிலேயே மரணமடைந்த வரதாபாயின் உடலை ஹாஜி மஸ்தான் தனி விமானத்தில் மும்பைக்கு கொண்டு சென்றார். ஏனென்றால் மும்பையில்தான் தனது உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்பது வரதாபாயின் ஆசை. ஒரு நண்பனாக தனது நண்பரின் கடைசி ஆசையை பூர்த்தி செய்த ஹாஜி  மஸ்தான், 1994-ம் ஆண்டு மரணமடைந்தார். 

அத்துடன் மும்பையில் தமிழ் தாதா உலகமும் முடிவுக்கு வந்தது! 


No comments:

Post a Comment