சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

அதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயணைப்பு வீரர்! (மரண வாக்குமூலம் வீடியோ)

திகாரிகளின் டார்ச்சர் காரணமாக தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் அந்த வீரர் வாட்ஸ் அப்பில் வாக்குமூலத்தை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்த மணிகண்டன் என்பவர், தனது உயரதிகாரிகள் டார்ச்சர் கொடுப்பதாக புகார் கூறிவிட்டு கடந்த 9-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, சக பணியாளர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக, கடந்த 16-ம் தேதி மண்டல தீயணைப்பு அதிகாரி மீனாட்சி விஜயகுமார் விசாரணை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மணிகண்டன் உட்பட 9 பேரை பணியிட மாறுதல் செய்து விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த மணிகண்டன், உயரதிகாரிகளின் பெயரை குறிப்பிட்டு தற்கொலைக்கு இவர்களே காரணம் என்று கூறி, தனது வாக்குமூலத்தை வாட்ஸ் அப்பில் பதிவு செய்து அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

"கடும் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டனை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவே அவரது உயிரை பறித்துவிட்டது" என்று சக பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


No comments:

Post a Comment