சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Oct 2015

நீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு!


நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை, நிகழ்ச்சி ஒன்றில் நடிகை குஷ்பு சந்தித்து பேசினார். 
 
திமுகவில் 4 ஆண்டுகாலம் இருந்த நடிகை குஷ்பு, கருணாநிதியை தந்தைபோல் கருதி மிகுந்த அன்பு செலுத்தினார். திமுக நடத்தும் பல்வேறு போராட்டங்களுக்கு குஷ்பு தலைமை தாங்கி வந்தார். மேலும், திமுக முக்கிய பேச்சாளராக வலம் வந்தார் குஷ்பு.

குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்த குஷ்பு, தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி தனது கருத்தை சுதந்திரமாக வெளியிட்டார். இதனால் ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு, வீடு மீது தாக்குதல், செருப்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் குஷ்பு மனவேதனை அடைந்தார். இதனால் அக்கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து திடீரென விலகினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், கருணாநிதியை சந்திக்கவே இல்லை குஷ்பு.

இந்நிலையில், வைரமுத்து எழுதிய சிறுகதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கருணாநிதியை, குஷ்பு சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும், கருணாநிதியின் உடல் நலம் குறித்து குஷ்பு அக்கறையுடன் கேட்டறிந்தார்.

திமுகவில் இருந்து விலகி ஓராண்டுகளுக்கு மேல் கருணாநிதியை சந்திக்காமல் இருந்த குஷ்பு தற்போது விழா ஒன்றில் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment