சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

பம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய் பாடிய பாடல்களின் லிஸ்ட்!

நடிப்பு மட்டுமில்லாது நடனம், பாடல் என்று ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய். இறுதியாக வெளியான புலி படத்தோடு சேர்த்து 58 படங்களை நடித்து முடித்துவிட்டார் விஜய். 

தற்பொழுது அட்லி இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வருகிறார். படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அவர் படத்தில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். இதுவரை 30 பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இளையராஜாவில் தொடங்கி தேவா, யுவன், சங்கர் ராஜா, தேவி ஸ்ரீபிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட அனைத்து டாப் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவிட்டார்.  

அந்தப் பட்டியல் இதோ,


1. பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி - ரசிகன் - தேவா
2. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா
3. அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு - தேவா
4. கோத்தகிரி குப்பம்மா - தேவா
5. தொட்டபெட்டா ரோட்டு மேல - தேவா
6. பம்பாய் பார்ட்டி ஷில்பா ஷெட்டி - கோயம்புத்தூர் மாப்பிள்ளை - வித்யாசாகர்
7. திருப்பதி போனா மொட்டை - மாண்புமிகு மாணவன் - சபேஷ் முரளி
8. சிக்கன் கறி - செல்வா - சிற்பி
9. அஞ்சாம் நம்பர் பஸ்ஸில் - காலமெல்லாம் காத்திருப்பேன் - தேவா
10. ஊர்மிளா ஊர்மிளா - ஒன்ஸ்மோர் - தேவா
11. ஓ பேபி பேபி - காதலுக்கு மரியாதை - இளையராஜா
12. மெளரியா மெளரியா - பிரியமுடன் - தேவா
13. காலத்துக்கேத்த ஒரு கானா - வேலை - யுவன் சங்கர் ராஜா
14. நிலவே... நிலவே.... - நிலாவே வா - வித்யாசாகர்
15. சந்திரமண்டலத்தை - நிலாவே வா - வித்யாசாகர்
16. நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து - பெரியண்ணா - பரணி
17. ஜூட்டடி லைலா - பெரியண்னா - பரணி
18. ரோட்டுல ஒரு - பெரியண்னா - பரணி
19. தங்கநிறத்துக்கு - நெஞ்சினிலே - தேவா
20. மிஸ்ஸிசிப்பிநதி குலுங்க - பிரியமானவளே - எஸ்.ஏ.ராஜ்குமார்
21. என்னோட லைலா - பத்ரி - ரமணகோகுலா
22. உள்ளத்தைக் கிள்ளாதே - தமிழன் - இமான்
23. கொக்கோ கோலா - பகவதி - தேவா
24. வாடி வாடி வாடி - சச்சின் - தேவி ஸ்ரீபிரசாத்
25. கூகுள் கூகுள் - துப்பாக்கி - ஹாரிஸ் ஜெயராஜ்
26. வாங்கண்ணா வணக்கங்கண்னா - தலைவா - ஜி.வி.பிரகாஷ்
27. கண்டாங்கி - ஜில்லா - இமான்
28. செல்ஃபி புள்ள - கத்தி - அனிருத்
28. ஏண்டி ஏண்டி - புலி - தேவி ஸ்ரீபிரசாத்
30. டிக் டிக் டிக் - துள்ளித்திரிந்த காலம் - ஜெயந்த் 
31வது பாடலையும் பாடி முடித்துவிட்டார் விஜய். அட்லி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் “செல்லக்குட்டி” என்ற பாடலையும் தன் குரலில் பதிவு செய்துவிட்டார். கமல்ஹாசனைத் தொடர்ந்து அதிகப்படியான பாடல்களை பாடியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment