கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த விபத்து நடந்தபோது ஏராளமான நடிகர்கள், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். அந்த சமயத்தில் அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிதியுதவி அளிக்கப்படும் என்று நடிகர் சரத்குமார் கூறியிருந்தார்.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 2 லட்சம், விவேக் ஒரு லட்சம், கமல்ஹாசன் 12 லட்சம், விஜய், சூர்யா தலா ரூ. 5 லட்சம் என பல நடிகர்கள் நிதியுதவி அளித்தனர். அந்த வகையில் 60 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலானதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தான் அறிவித்த 10 லட்ச ரூபாயை ஒவ்வொரு குடும்பத்திற்கும் பகிர்ந்தளித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் நலனுக்கான குழுவின் தலைவரான இன்பராஜ், பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிதி உதவி அறிவித்து, வசூலித்து விட்டு, அந்த நிதியை தராமல் இழுத்தடிப்பதாக இன்று செய்தியாளர்களிடம் பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாவது, எங்கள் குழந்தைகள் பெயரில், நிதி வசூலித்து அதனை மோசடி செய்திருந்தால், அதுகுறித்து விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்..
No comments:
Post a Comment