சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Oct 2015

பள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவன் கத்தாரில் குடியேறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள இர்விங் என்ற நகரில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த அகமது முகமது என்ற மாணவன், தான் கண்டுபிடித்த மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து ஆசிரியரிடம் காட்டினான். அதனை வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 'டைம் பாம்' என்று கருதிய ஆசிரியர், போலீசுக்கு தகவல் கொடுத்தார். பள்ளிக்கு வந்த போலீசார், மாணவன் என்றும் பார்க்காமல், அவனை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அந்த மாணவனை விடுவித்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமா, அந்த மாணவனை வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அகமது முகமது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினான். இந்நிலையில் , மாணவன் அகமதுவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கத்தார் அரசு அகமது முகமதுவுக்கு பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஸ்காலர்ஷிப் வழங்க முன்வந்துள்ளது. இதனால் நாங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி கத்தாரில் குடியேறப் போகிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் போர் விமானங்களை தாக்கி அழிக்க, ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆணுறை வெடிகுண்டுகளை தயாரித்து பறக்கவிட்டு, நெருக்கடி கொடுத்து வரும் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.

 
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக,  அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அதேபோல் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா,  ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களைக்  குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவில் கடும் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் சிரியாவின் லடக்கியா மாகாணத்தில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதியை குறிவைத்து ரஷ்யா வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில்,  ஐ.எஸ் தீவிரவாதிகள்,  ரஷ்யாவின்  விமான தாக்குதலை சமாளிக்க வித்தியாசமான நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்யாவின் விமானங்களை அழிக்க அவர்கள் ஆணுறைகளில்  வெடிகுண்டை வைத்து  பயன்படுத்தி வருகின்றனர். இது அவர்கள் வெளியிட்டு உள்ள வீடியோ மூலம் தெரியவந்து உள்ளது.

அந்த வீடியோவில் சில தீவிரவாதிகள் ஆணுறைகளில் வெடிகுண்டுகளை வைத்து பறக்கவிடுகின்றனர். மேலே பறந்து செல்லும் இந்த வெடிகுண்டுகள் ரஷ்ய விமானங்களை தாக்குகின்றன.  இத்தகைய வெடிகுண்டுகள் சிரியாவின் இடிலிப் நகரில் பயன்படுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment