சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Oct 2015

எங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி. அரசுக்கு அமிதாப் வேண்டுகோள்

தனது குடும்பத்தாருக்கு அளிப்பதாக கூறிய ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கும், நல்ல திட்டங்களுக்கும் செலவிடுங்கள் என உத்தரபிரதேச அரசை, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச அரசால் வழங்கப்படும் உரிய விருதான 'யாஷ் பாரதி சம்மான்' என்ற விருதுக்கு அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக்பச்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருதை பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் வரை மாதாமாதம் தலா ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் அளிக்கப்படும்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்துக்கு இந்த ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தனது குடும்பத்தாருக்கு அளிப்பதாக கூறிய ஓய்வூதியத்தை ஏழை, எளியவர்களுக்கு உதவும் நல்ல திட்டத்திற்கு அளிக்குமாறு உத்தரபிரதேச அரசை அமிதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு, அமிதாப் பச்சன் எழுதி உள்ள கடிதத்தில், ''எனக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் 'யாஷ் பாரதி' விருது வழங்கி உத்தரபிரதேச அரசு கௌரவித்ததை மதிக்கிறேன். விருது பெற்றுக் கொண்ட அனைவருக்கும் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் என்னுடைய குடும்பத்திற்கு வழங்கப்பட உள்ள முழுத்தொகையையும், கஷ்டப்படும் ஏழைகளுக்கும், நம்பிக்கைக்குரிய அறக்கட்டளையின் திட்டங்களுக்கும் செலவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment