சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Oct 2015

மதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைது!

மதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் கைது செய்யப்பட்டார். 

மறைந்த நடிகர் முத்துராமனின் மகன் கணேஷ் முத்துராமன் (57). நடிகர் கார்த்திக்கின் சகோதரரான இவர், சென்னையில் வசித்து வரும் கணேஷ், கொடைக்கானலில் ஓட்டல் வைத்து இருக்கிறார். கொடைக்கானலில் இருந்து நேற்று முன்தினம் மதுரை வந்த கணேஷ் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.  

அப்போது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேல் விசாரணைக்காக கணேசை பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது, நடத்தப்பட்ட விசாரணையில் கணேஷ் கூறுகையில், ‘‘இது என்னுடைய கைப்பை அல்ல. நடிகர் கார்த்திக்கு சொந்தமானது. அவர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். அதன்பின் என்னிடம் இதனை தெரிவித்த கார்த்திக், சென்னை வரும் போது பையை கொண்டு வருமாறு கூறினார். நானும், அதனை எடுத்து வந்தேன். அதில் இருப்பது தோட்டாக்கள் என தெரியாது" என்றார். 

இதையடுத்து காவல்துறையினர், நடிகர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது, அது அவரது கைப்பை தான் என்பதும், துப்பாக்கி வைத்து இருக்க லைசென்சு வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கி தோட்டாக்களை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் கணேஷ் விடுதலை செய்யப்பட்டார்.No comments:

Post a Comment