சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Oct 2015

நான் என்ன விவசாயியா? அமைச்சர் முன்னிலையில் கட்சி பிரமுகரிடம் எகிறிய அதிமுக எம்.பி!

அமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்பியும், கட்சி பிரமுகரும் வாக்குவாதம் செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவி ஏற்பு விழா, சிவகாசியில் இன்று நடந்தது. அதிமுக எம்.பி ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் எம்,எஸ் ராஜா வர்மன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட பொருளாளர் ராஜா வர்மன், தனது பேச்சினிடையே ஜெயலலிதாவைப் புகழும் விதமாக “சாதாரண குடும்பத்தில் பிறந்த யாரும் அதிமுகவில் பதவியில் வரலாம். விவசாயம் குடும்பத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாகவில்லையா? " என்று பேசினார். இதில் கடுப்பான ராதாகிருஷ்ணன், "நான் என்ன விவசாயியா?''  என மேடையிலேயே ராஜாவர்மனிடம் எகிறினார். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கட்சி பிரதிநிதிகள் இருவரும் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து யாருக்கு ஆதரவாகப் பேசுவது என்று புரியாமல் தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தவித்தார். எப்படியோ இருவரிடமும் பேசி ஒருவாறு சமாதானம் செய்தார்.
அமைச்சர் முன்னிலையில் கட்சிப்பிரதிநிதிகள் இருவர் காரசாரமாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனிடையே விவசாயி என்ற வார்த்தை கவுரவம் குறைந்துவிட்டதாக கூறி வாக்குவாதம் செய்ததாக பரவிய தகவலால் விவசாயி என்றால் கவுரவக்குறைவான வார்த்தையா, என விவசாயிகளிடையே கொந்தளிப்பு உருவாகியுள்ளது.


No comments:

Post a Comment