சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Oct 2015

அன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்!


தாய்மையின் புனிதத்தையும், பெண்மையின் அழகியலையும் வெளிப்படுத்தும் முயற்சியாக 'Bodies Of Mothers' எனும் புகைப்பட ஆல்பம் உருவாக்கியிருக்கிறார் பிரபல புகைப்படக் கலைஞர் ஜேட் பியல்.
உலகம் முழுக்க 80 தாய்மார்கள் பங்கெடுத்த  இந்த முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை கஸ்தூரி தன் குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார். ‘A Beautiful Body’ என்ற தலைப்பில் அந்த ஆல்பம் உருவாகியிருக்கிறது.  ஜேட் பியல் என்ற பிரபல புகைப்படக் கலைஞர் தனது வாழ்நாள் புராஜெக்டாக உருவாக்கியிருக்கும் இந்த ஆல்பம், பெண்கள் தற்போது உலகில் அனுபவிக்கும் பிரச்னைகள், வன்கொடுமைகளைக் கடந்து எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் இன்றி தங்களது இயற்கையான அழகை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை மையமாகக் கொண்டிருக்கிறது.
 இந்த புகைப்படத் தொகுப்புகளுக்காக சுமார் ஒரு லட்சம் பெண்களுக்கும் மேல் ஜேட் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அவர்களின் உணர்வுகள், அனுபவங்கள் என அனைத்தும் அந்தப் புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளன. மேலாடையின்றி தன் குழந்தையை அணைத்துக் கொண்டிருக்கும் அந்தப் படங்களில் துளி ஆபாசம், கவர்ச்சி, விரசம் என எதுவும் இல்லை. பசுமையான பள்ளத்தாக்கு சலசலத்து ஓடும் நதி என இயற்கையை தரிசிக்கும் அழகுதான் அப்படங்களில் வெளிப்படுகிறது.
இந்தப் பார்வையில் பெண்கள் உடல்கள் எப்போதும்  மதிக்கப்பட, கொண்டாடப்பட வேண்டும் என்பதே ஜேட் பியலின் எண்ணம்! ’தனது புகைப்படக் கருவியில் எப்போதும் உண்மைகளைப் படம்பிடிப்பதே நோக்கம்’ எனக் கூறுகிறார் ஜேட்.  

புகைப்படக் கலைஞர் ஜேட் பியல்

No comments:

Post a Comment