சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Oct 2015

'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...!'-ஸ்டாலினை கிண்டல் அடித்த வளர்மதி

ஆட்டோவில் ஏறி,  'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்...' என்று வடிவேலு பாணியில் மு.க.ஸ்டாலின்,  நமக்கு நாமே பயணம் செல்வதாக அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சித்து பேசினார்.

திருவாரூரில் அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனையை விளக்கி பட்டிமன்றம் நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.
விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், "சர்க்கஸ் பபூன் போல சிலர் நடுத்தெருவிற்கு வந்து நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நம்பி விடாதீர்கள். 

ஆட்டோவில் ஏறி நானும் ஜெயிலுக்குப் போறேன் என்று வடிவேலு சொன்னதை அப்படியே கன்னியாகுமரியில் செய்கிறார்கள். இதெல்லாம் திட்டமிடப்பட்ட நாடகம்தான். வடிவேலு ஜெயிலுக்குப் போவதாக ஆட்டோவில் ஏறினார். நீங்கள் ஜெயிலுக்குப் போவதற்கான ஒத்திகையாக ஆட்டோவில் ஏறி இருக்கிறீர்கள்.

அது என்ன நமக்கு நாமே..! எங்க அம்மாவை பாருங்கள். 'மக்களுக்காக நான் மக்களால் நான்'  என்கிறார். அதைப்போன்ற பரந்த நோக்கத்தோடு செயல்படுங்கள். அதை விடுத்து நமக்கு நாமே என்று இருக்காதீர்கள்.
திருவாரூரில் நமக்கு நாமேன்னு ஸ்டாலின் பேசினாரமே. 'மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவில்லை. மக்கள் பிரச்னைகளை நோக்கவில்லை என்றால் அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கு சட்டம் உருவாக்கப்படும் என்று'
சட்டம் போடுவதற்கு ஸ்டாலின் என்ன அம்பேத்கர் வாரிசா? சட்டம் போட்டால் முதலில் கருணாநிதியைத் தான் தூக்கி உள்ளே வைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராகி எத்தனை முறை சட்டபேரவைக்கு வந்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்போமா? இரண்டாவது ஸ்டாலின்தான். சட்டப்பேரவைக்கு விடுப்பு போட்டுவிட்டு ஊர் ஊராக சென்று சந்திக்கிறீங்களே? யாரிடம் வந்து சட்டம் பற்றி பேசுவது" என்று ஆவேசமாக பேசி முடித்தார்.

No comments:

Post a Comment