சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமன் 18 வயதில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாகி (ஆடிட்டர் )உலக சாதனை படைத்துள்ளார். இத்தகைய இளம் வயதில் ஒருவர் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டாவது இதுவே முதல் முறை.
இது குறித்து வளைகுடா நாடுகளில் இருந்து வெளிவரும் 'கலீஜ்டைம்ஸ்' வெளியிட்டுள்ள செய்தியில், துபாயில் வசிக்கும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 18 வயது ராம்குமார் ராமன், தனது முதல் முயற்சியிலேயே சார்ட்டர்ட் அக்கவுண்டண்டுக்கான 14 பேப்பர்களிலும் பாசாகியுள்ளதாக கூறியுள்ளது.
வளைகுடா நாடுகளில் செயல்படும் 'சார்ட்டர்ட் சர்டிபைட் அக்கவுண்ட்ஸ் அமைப்பு' ராம்குமாரின் சாதனையை ஏற்றுக் கொண்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராம்குமார் ராமனின் தந்தையும் சார்ட்டர் அக்கவுண்டன்ட்தான். கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதற்காக பயிற்சி எடுத்து வந்த ராம்குமார் கடந்த ஜுன் மாதம் பாசாகியுள்ளார்.
இவர் துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்.அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து விட்டு, முதலீட்டுத்துறையில் பணியாற்ற வேண்டுமென்பது ராம்குமார் ராமனின் லட்சியம்.
No comments:
Post a Comment