சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

தொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்!

ன்றாடம் மக்கள் பார்க்கும் செய்தியாகி வருகிறது 'நின்ற லாரி மீது பேருந்து மோதல்' என்ற கோர விபத்துச் செய்தி.
திருச்சி அருகே அரசு பேருந்தும், டிரெய்லர் லாரியும் மோதிய விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் போன்று, ஆண்டுக்கு பல ஆயிரம் பேரை 'லோடு ஏற்றிய லாரி' உயிரை பார்சல் அனுப்பி வருகிறது. ஒரு மணி நேரமாவது 108 வாகனத்தின் சத்தம் கேட்காமல் இருக்க முடியாதா என்ற எண்ணம் எழுகிறது.

இந்த கோர விபத்துக்கு அரசு விரைவுப் பேருந்தின் அதிவேகமா இல்லை, ஓட்டுனரின் கவனக் குறைவா என்பதை நினைக்கும் வேளையில், சாலையில் லாரி நிற்க வேண்டிய அவசியம் என்ன? இரும்புத் தகடுகள் 2 அடிக்கு வெளியே தெரிந்தும் போலீஸ் ரோந்து வாகனம் அதை கவனிக்காமல் விட்டது எப்படி? என்பன போன்ற கேள்விகள் எழுகிறது.

சுமார் 6.5 கோடி ரூபாய் செலவில், 2007-ம் ஆண்டு நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து போலீசாருக்கு அதிநவீன சாதனங்களுடன், 42 ரோந்து கார்கள் அரசால் வழங்கப்பட்டன.  சமீபத்தில் கூட பல கோடி மதிப்பிலான ரோந்து கார்கள் முதல்வரால் வழங்கப்பட்டதாக  செய்தி வந்தது. ஆனால், ரோந்து போலீசார் எந்த அளவிற்கு பணியில் தீவிரமாக உள்ளனர் என்பதை, வாகனத்தில் அமர்ந்து கொண்டு பேப்பர் படிப்பதையும், தூங்குவதையும், டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பதையும் பார்த்தால் எளிதாக புரிந்து  கொள்ள முடியும். சில வருடத்திற்கு முன் தனியார் வாகனத்தில் சென்ற தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி காரை மறித்து, 'காசு கேட்ட' ரோந்து போலீசார் வரலாறும் உள்ளது.

அரசு வழங்கிய ஹைவே ரோந்து போலீஸ் வாகனம், சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்த விடாமல் செய்திருந்தால் பல நூறு உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கும்.

அதி நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் முக்கிய இடங்களை கண்காணிக்க அரசு நடவடிக்கை வேண்டும். போலீஸ் நவீன மயமாக்கல் என்ற பெயரில் பல கோடிகள் செலவழித்தும் விபத்து குறையவில்லை. மாறாக, விபத்தில் இறந்தவர் குடும்பங்களுக்கு அரசு கொடுக்கும் இழப்பீடு அதிகரித்து வருவது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

இன்றைக்குள்ள போக்குவரத்து நெரிசலும், கண் கூசும் முகப்பு விளக்குகளும் விபத்திற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில் கட்டுப்பாடு இல்லாத வேகமும், முந்திச் சென்று பயணிகளை ஏற்ற வாகனப் போட்டி நடக்கும் இடமாக நெடுஞ்சாலைகள் மாறி விட்டன.
அரசுப் பேருந்தின் ஓட்டுனர்களும், தனியார் வாகனத்திற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அலட்சியமாகவும், மோசமாகவும் வாகனம் ஓட்டுவது அனைவருக்கும் தெரிந்ததே. குடித்து விட்டு வாகனம் ஓட்டிய தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத போலீசார் உள்ள மாநிலத்தில், அதிவேகமாக ஓட்டும் லாரி, பேருந்து ஓட்டுனர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

சட்டம் ஒழுங்கு பிரச்னையின் போது மட்டுமே பயன்படும் ஆயுதப் படை போலீசாரை சாலை ரோந்துப் பணிக்கு பயன்படுத்த வேண்டும். முகப்பு வெளிச்சம் அதிகமுள்ள வாகனத்திற்கு  கட்டுப்பாடும், தண்டனையும் வழங்க வேண்டும்.

இவ்வளவு ரோந்து வாகனம் இருந்தும் விபத்தின் வேகம் குறையவில்லை, கொத்து கொத்தாக சாகும் உயிர்கள் குறையவில்லை. ரோந்து வாகனத்தால் அரசியவாதிகளுக்கு   பாதுகாப்பு கொடுப்பதைத் தவிர, எந்த பொதுமக்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்யவில்லை.

அரசு வழங்கும் நிவாரண பணத்தால் பறி போன பாசமான  உயிர்களை மீட்டுத் தர முடியாது. ஆனால், இதுபோன்ற அசம்பாவிதம் இனி நடக்காமல் இருக்க அரசால் பாதுகாப்பான போக்குவரத்தை, தரமான ரோந்து போலீசாரை உருவாக்க முடியும்!


No comments:

Post a Comment