இந்திய வருகையின்போது, இணைய சமநிலை தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனர் சக்கர்பர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு, இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு பதிலடி கொடுத்துள்ளது. கட்டுப்பாடில்லாத இணையத்தை அனைவரும் அணுகுவதே முக்கியம் என்றும், சக்கர்பெர்க் இணையத்தை வடிகட்டி அளிக்க முயற்சிக்கிறார் என்றும் இந்த குழு குற்றம் சாட்டியுள்ளது.
முன்னணி சமூக ஊடக சேவையான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அண்மையில் இந்தியா வந்தபோது, டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனம் முன்வைக்கும் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம், இணைய சமநிலைக்கு எதிராக அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுவதுவது பற்றியும் அவர் பதில் அளித்தார். இணைய சமநிலையை ஆதரிப்பதாக கூறிய அவர், அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைக்கச்செய்வதை நோக்கமாக கொண்ட இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் இதற்கு எதிரானதல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

இணையத்தை அணுகும் வசதி இல்லாவிட்டால், போராட்டங்களுக்கான இணைய மனுவில் எப்படி கையெழுத்திட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இந்தியாவில் இணைய சமநிலை காக்க போராடி வரும் 'சேவ் தி இண்டெர்நெட்' ( Save the internet.in ) ஆர்வலர்கள் குழு, சக்கர்பர்க்கிற்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது.
இந்த மடலில், இணைய சமநிலை தொடர்பாக சக்கர்பர்க் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதோடு, அவருடைய இண்டெர்நெட். ஆர்க் திட்டம் எப்படி இணைய சமநிலைக்கு விரோதமானது என்றும் விளக்கி உள்ளது.

"இண்ட்நெர்நெட். ஆர்க் திட்டத்தை எதிர்ப்பவர்கள், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இணையத்தை கொண்டு சேர்க்க முயற்சிப்பவர்கள் என்பது போல நீங்கள் ( சக்கர்பர்க்) கருத்து தெரிவித்திருந்தாலும், உண்மையில் கட்டுப்பாடில்லாத இணையம் மூலமே பலரும் பலனடைந்துள்ளோம்.
அனைவருக்கும் இணைய வசதி தேவைதான்; ஆனால் முழு இணையமாக இருக்க வேண்டும். நீங்கள் முயற்சிப்பதுபோல வடிகட்டப்பட்ட இணையமாக இருக்க கூடாது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய தந்தை டிம் பெர்னர்ஸ் லீ குறிப்பிட்டது போன்று, பொருளாதார ஏற்றத்தாழ்வுபோல தொழில்நுடப் ஏற்றத்தாழ்வும் ஆபத்தானதுதான் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆர்வலர்கள், இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் வெளிப்படையானது அல்ல என்றும், அவ்வாறு எனில் அதில் பங்கேற்கும் தளங்களுக்கான அனுமதி மற்றும் நிராகரிப்பை உங்கள் வசம் வைத்திருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இண்டெர்நெட்.ஆர்க் (ப்ரிபேசிக்ஸ்) திட்டம், எதிர்காலத்தில் லாப நோக்கில் பயன்படுத்தப்படாது என உறுதி அளிக்காதது ஏன் என்றும், இணைய இணைப்பு வழங்கும் ப்ரிபேசிக்ஸ் தளத்தின் முகவரியை லாப நோக்கிலான டாட்.காம் என பதிவு செய்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இணைய சமநிலை காரணமாகவே ஃபேஸ்புக் வளந்தது என்றும், இணைய சமநிலையை பாதிக்காமல் அனைவருக்கும் இணைய வசதி அளிப்பது முக்கியம் மற்றும் சாத்தியம் என்றும் அந்த கடிதம் குறிப்பிடுகிறது.
கடிதம்: http://blog.savetheinternet.in/response-to-facebook-townhall/

No comments:
Post a Comment