சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...!'- ஸ்டாலினை விமர்சிக்கும் சைதை!

திராவிட இயக்கம் என்றால் பேச்சும், எழுத்தும், ஈர்ப்பும்தான் அதனுடைய மூலதனம் என்ற கருவுக்கு எதிரான, முரணான, எதற்குமே பொருத்தமில்லாதவர் ஸ்டாலின்" என்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
அ.தி.மு.க-வின் 44-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
சென்னை, நீலாங்கரையில் மாநகராட்சி கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவர் எம்.சி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டு பேசுகையில், ''1972-ம் ஆண்டு அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, 'இந்த இயக்கம் நீண்ட நாள் தாங்காது. மத்திய அரசுக்குப் பயந்து அவர்களின் நெருக்கடிக்காகத் தொடங்கப்பட்டது' என்றெல்லாம் ஆருடம் சொன்னார்கள். எம்.ஜி.ஆர். இருந்தவரை லட்சங்களில் இருந்த அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணிக்கை, ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு இன்றைக்கு ஒன்றரை கோடிக்கும் அதிகமாகியிருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இந்த இயக்கம் தமிழகத்தைத் தாண்டி பெரிதாகப் பேசப்படவில்லை. அப்படிப்பட்ட இயக்கத்தை இன்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக்கி இருக்கிறார் முதல்வர்.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 51.9 சதவீதம். தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளின் சதவீதம் 39.5. பி.ஜே.பி. கூட்டணி பெற்ற வாக்குகள் 8.5 சதவீதம். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 44.3 சதவீதம் என்றால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு வாக்கு என்பது 7.6 சதவீதம் மட்டுமே.  அதாவது தே.மு.தி.க., ம.ம.க. உள்ளிட்ட 6 கட்சிகளின் வாக்கு சதவீதம் 7.6 மாத்திரமே. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம், ம.ம.க.  முஸ்லீம் லீக் இவைகள் எல்லாம் சேர்த்து தி.மு.க. கூட்டணி பெற்ற வாக்குகளின் சதவீதம் 26.8. இப்போது புதிய தமிழகம் மற்றும் முஸ்லீம் லீக்கைத் தவிர இந்தக் கட்சிகளில் தி.மு.க.வோடு கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. வி.சி.க. இல்லை. ம.ம.க. இல்லை. அப்படியானால் தி.மு.க. வரும் தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகள் வாங்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

கூட்டணி அமைத்தபோதே 26 சதவிதத்துக்கு மேல் பெறமுடியாத தி.மு.க., நமக்கு நாமே என்று நின்றால், எத்தனை சதவீத வாக்கு அவர்களுக்குக் கிடைக்கும் என்பதை நம்மைவிட கருணாநிதிக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற முடியாது, அப்படி ஒரு சூழல் வருமானால் இந்த இயக்கம் பிளவுபட்டுவிடும். அப்படி பிளவுபட்டுவிட்டால் நாம் இத்தனை ஆண்டுகாலம் சேர்த்து வைத்திருக்கிற தி.மு.க. அறக்கட்டளைச் சொத்துக்களுக்கு வேறு யாரோ உரிமைக் கொண்டாடிவிடுவார்கள் என்பதற்காகத்தான் கருணாநிதியுடைய திரைக்கதை, வசனம் இயக்கத்தில் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கோமாளிக் காட்சிகள் 'நமக்கு நாமே' என்ற திரைப்படம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பில்டப் கொடுக்கப்படுகிறது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே ஒருதிரைப்படத்தைப் பற்றி பிரமாண்டமான பாடல், பிரமாண்ட அரங்கு, பிரமாண்ட வசனம் என்று ஒவ்வொரு செய்தியாக வரும். அதேபோல் காட்சி அமைப்பு செட்டப் எல்லாம் நடைபெறுகிறது. ஆனால் கதாநாயகன் ஒரு கோமாளியைப் போல் இருக்கிறார் என்கிற... ஒரு பிரமாண்ட தயாரிப்பு அட்டர் ப்ளாப் என்கிற செய்தி 2016-ம் ஆண்டு தேர்தல் களத்தில் அந்த திரைப்படத்தினுடைய அபிப்ராயமாக வரும்.
முதல்வருக்கு எதிராகக் களத்திலே ஸ்டாலினா? முதல்வரின் லீடர்ஷிப்புக்கு இணையான ஒரு லீடர் இந்தியத் துணைக்கண்டத்திலேயே இல்லை என்கிறபோது... ஆப்ட்ரால் ஸ்டாலின்! பேசத் தெரியாதவர், சிந்திக்கத் தெரியாதவர் நான்கு வார்த்தைகளை, நான்கு சொற்றொடர்களைச் சொல்லத் தெரியாதவர், திராவிட இயக்கம் என்றால் பேச்சும் எழுத்தும் ஈர்ப்பும்தான் அதனுடைய மூலதனம் என்ற கருவுக்கு எதிரான, முரணான, எதற்குமே பொருத்தமில்லாத- 'இவன் இதுக்கு சரிபட்டு வரமாட்டான்' என்று ஒரு திரைப்படத்திலே வரும் வசனம்போல, அதுக்கு சரிபட்டு வரமாட்டீங்க என்று சொல்லத்தக்க வகையில் இருக்கிறவர் ஸ்டாலின். முதல்வரை எதிர்கொள்கிற ஆற்றல், திராணி, கவர்ச்சி, கொள்கை, பேச்சாற்றல், சிந்தனையாற்றல், சொல்லாற்றல், ஆட்சியினுடைய நலத்திட்டங்களை அனைத்து மக்களுக்கும் செயல்படுத்துகிற வேகம், விவேகம் இவைகளில் எள்முனையளவு இருக்கிறதா இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற எந்த அரசியல் தலைவருக்காவது?

தனித்து நின்று நாடாளுமன்றத் தேர்தலில் 39-க்கு 37 என்றால், எதிர்வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234-க்கும் 234 என்கிற புதிய வரலாற்றை, புதிய சரித்திரத்தை அம்மா படைக்கப்போகின்றார்கள். இது சத்தியம், இது சத்தியம், நடைபெறுவது நிச்சயம்'' என்று பேசினார்.


No comments:

Post a Comment