சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Oct 2015

'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு!'

தித்யா சேனலில், அசால்ட்டாக பல பல ஐடியாக்களில் நிகழ்ச்சி முழுக்க நகைச்சுவைகளை தூவிக்கொண்டிருக்கும்  நிகழ்ச்சி தொகுப்பாளார் அசார்,  'சாரல்', 'ஏண்டா தலையில எண்ணைத்தடவல?', 'கடலப்போட ஒரு பொண்ணு வேணும்' என  மூன்று படங்களிலும் நடித்திருக்கிறார்.

அவரோட பயோ டேட்டா இதோ...
 
உங்களைப் பற்றி?

''என்னோட முழுப்பெயர் முகமது அசாருதீன். அப்பாவுக்கு கிரிக்கெட் மேல ரொம்ப ஆர்வம். அதனால, எதிர்காலத்துல நம்மப் பையனும் முகமது அசாருதீன் மாதிரி பெரிய கிரிக்கெட் பிளேயரா வரணும்ங்கற ஆசையில, அந்த கிரிக்கெட்டர் பேரை வச்சாரு. நான் பக்கா சென்னைப்பையன். அதுவும் வடசென்னை. 'எங்க ஊரு மெட்ராசு'னு கிரிக்கெட் மட்டைய அப்பவே தூக்கிட்டு ஏரியாவையே ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தேன். 'முல்லை' என்கிற கிரிக்கெட் டீமோட கேப்டன் நான். சின்ன வயசுல ஆர்வமா இருந்தது. வெயில்ல விளையாடி விளையாடி ஒரு கட்டத்துல எனக்கு தலைவலி பிரச்னை ஆரம்பிச்சப்போ, கிரிக்கெட்ட விட்டுடுடா கைப்புள்ள'னு டாக்டர் சொல்லவும் கிரவுண்டுல விளையாடறத விட்டுட்டு, டி.வி.யில மேட்சப் பார்க்க ஆரம்பிச்சேன். கிரிக்கெட் போட்டியில நிறைய ஃபிராடு விஷயங்கள் நடக்கறத கேள்விப்பட்டு, படிச்சி கடைசியில அதைப்பார்க்கிறதையே விட்டுட்டேன்''.

உங்க படிப்பு?

''ஸ்கூல், காலேஜ் என எல்லா வகுப்புலயும் நான் அவுட் ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட். ஆமாங்க, எப்பவும் கிளாஸூக்கு வெளியிலதான் இருப்பேன். ஒருவழியா டிப்ளமோ இ.சி.இ முடிச்சிட்டேன்''.

நீங்க பார்த்த முதல் வேலை... எப்படி வி.ஜே ஆவதற்கான வாய்ப்புக்கிடைச்சது?

''என்னங்க நீங்களும் வேலைக்கு ஆள் எடுக்கற மாதிரியே கேட்குறீங்க? இதுக்கெல்லாம், அசர்ற ஆள் நான் இல்ல... நாங்களாம் சேரன் வாய்சையே அசால்ட்டாப் பேசினவங்க... எதாவது ஒரே ஒரு வேலையைப் பார்த்திருந்தா சொல்லலாம்... நான்தான் பர்மா பஜார், ஃபர்னிச்சர் கடை, ஷோரூம், சோனி எரிக்சன் கம்பெனியில மார்க்கெட்டிங்  டிப்பார்ட்மெண்ட்னு ஓராயிரம் இடத்துல வேலைப்பார்த்திருக்கேனே. காரணம், ஒரு இடத்துல எனக்கு வேலை செய்யப்பிடிக்கலனா உடனே, அந்த வேலைய விட்டுடுவேன். அதுக்கப்புறம்தான், எனக்கு 2008-ல விஜய் டி.வி 'அது இது எது' நிகழ்ச்சியில் பேசறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. அதுக்கப்புறம், எனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு கதவுகள் திறந்துச்சு. இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம், சூரியன் எஃப்.எம், 'செம்ம காமெடி சார்', 'இஞ்சி முரப்பா' ஆஹா எஃப்.எம்.-ல 'கோல் மால் அசார்' நிகழ்ச்சினுபோயிட்டு இருக்கும்போது, ஆதித்யா டி.வி.யில காமெடி ஷோக்கள் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது''.

உங்க தனித்தன்மையை காண்பிக்க நீங்க எடுத்துக்கிட்ட முயற்சி?

''ரேடியோவுல ஆர்.ஜே.-வா சேர்ந்த கொஞ்ச நாள் ஆனதுக்குப் பிறகு எல்லாரும் கேட்கிற கேள்வி, 'அடுத்து என்னப் பண்ணப்போறீங்க?' என்பதுதான். இப்படி மத்தவங்க கேட்டபோது, எனக்குள்ளயும் அந்த கேள்வி எழுந்துச்சு. அடுத்து என்ன சன் மியூசிக், ஆதித்யா சேனல்கள்ளயும் வாய்ப்புக்கேட்டிருந்தேன். இரண்டு இடத்துலயும் வாய்ப்பு வந்தது. சன் மியூசிக் போனா வெறும் போன் கால்களை மட்டுமே அட்டன் செய்து ஒரே மாதிரி பதில்கள சொல்லிட்டு இருக்கணும். ஆதித்யா சேனல்ல நிறைய காமெடி கான்செப்ட்கள் புதுசு புதுசா யோசிச்சு பண்ணுவோம். இந்த நிகழ்ச்சி எனக்கு பிடிச்சிருந்ததால, நான் அதை டிக் பண்ணேன். இப்போ செம ஜாலியாப் போயிட்டு இருக்கு. அங்கயும் என்னோட மிமிக்ரி, நகைச்சுவைய கலந்து பண்ணுவோம்''.

மிமிக்ரி ஆர்டிஸ்டான உங்களுக்கு எத்தனை வாய்ஸ் பேச வரும்?

'' கிட்டத்தட்ட 150 வாய்ஸ் பேச வரும். ஆனா, கரெக்டான அதாவது அச்சு அசலா அப்படியே அவங்க வாய்ஸை இமிட்டேட் பண்றதுனு பார்த்தா கமல், சூர்யா, ரஜினி, வடிவேல் போன்ற 10, 15 வாய்ஸ்தான்''. 

உங்களை பொதுவாக யார் சாயலில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்?

''ஒரு சாயலில் விஜய், 'ஜெயம்' ரவி, ஜீவா என ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க. ஆனா, எனக்கு நான் நானா இருக்கறதுதான் பிடிச்சிருக்கு''.
உங்களுக்கு கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு?

''ஆதித்யா சேனல்ல அப்பப்போ புது புது கான்சப்டோட ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பண்ணிட்டு இருப்போம். அப்படி ஒரு கான்சப்ட்தான் 'பேர் வச்சாலும், வைக்காம போனாலும் மல்லி வாசம்' என்கிற 'மைக்கேல் மதன காமராசன்' படத்தோட பாடலையும், பாடல் காட்சியையும் எங்க ஷூட் பண்ணாங்களோ அங்கேயே நாங்களும் போய் நடிச்சி ஷூட் பண்ணியிருந்தோம். அதை ஆதித்யா சேனல்ல, கமல் சார் பார்த்துட்டு, அசாருக்கு நான் வாழ்த்துக்கள் சொன்னதா சொல்லுங்கனு அவரோட கூட இருக்கற ஒருத்தர்க்கிட்ட சொல்லியிருந்தாராம். என்னால மறக்க முடியாத பாராட்டு அதுதான்.

உங்க வாழ்க்கையில யாரை ரொம்ப நாளா சந்திக்கணும்னு நினைக்கிறீங்க?

''சமீபத்துல மறைந்த, அப்துல் கலாமை எப்படியாவது நேர்ல பார்த்து ஆசி வாங்கணும்னு நினைச்சேன். அது கடைசி வரைக்கும் நடக்காமலேயேப் போயிடுச்சு. இப்போ என்னோட மிகப்பெரிய கனவு, ஆசையெல்லாம்  பிரண்ட்ஸ் மற்றும் மத்த ஆட்களோட போய் பாக்காம தனியா கமல் சாரைப் பார்க்கணும். சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு கட்டமா அவரை ரசிச்ச, பிடிச்ச, என்ன மாத்திக்கிட்ட விஷயங்களைப் பத்திப் பேசணும். அதுதான் என்னோட மிகப்பெரிய கனவு.''

'அசார்'னா உங்க பிரண்ட்ஸ் சொல்றது?

''சேட்டக்காரப் பையன் சார் அவன், சீரியஸா பேசிட்டு இருக்கும்போதே சட்டுனு சிரிக்க வச்சுடுவான்... ரொம்ப மோசமான பாசக்காரப்பய...!''


No comments:

Post a Comment