சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு 'கோட்'!

ரசு பள்ளிகள்’ என்றாலே மக்களுக்கு ஒரு வித அலட்சியப் பார்வை இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். படையெடுத்து வரும் ‘இன்டர்நேஷனல்’ பள்ளிகளுக்கு எந்தவிதத்திலும் சளைத்திருக்கவில்லை அரசு பள்ளிகள் என்பதை பறைசாற்றுவதாக அமைந்தது வன்னிவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட சர்வதேச ஆசிரியர் தின விழா.

கடந்த அக்டோபர்  5 ஆம் தேதி மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வன்னிவேலம்பட்டி என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சீருடையாக ‘கோட்’ வழங்கப்பட்டது. இருபாலர் படிக்கும் இப்பள்ளியில் ஆசிரியர்கள் ‘ஓவர்-கோட்’ அணிந்து கடந்த இரண்டு நாட்களாக வகுப்பெடுக்கின்றனர். பொதுவாக பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்குத்தான் ஓவர்-கோட், யூனிஃபார்மாக வழங்கப்பட்டிருக்கும்.

தற்போது வித்தியாசமாக ஆசிரியர்களுக்கு, குறிப்பாக அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு ‘கோட்’ வழங்கவேண்டும் என்கிற எண்ணம் எவ்வாறு உதித்தது என்பது குறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கரன் கூறியதாவது:      
அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் தாங்கள் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதை மனதார, அடிப்படையில் இருந்து உணர்வதற்காக முதலில் யூனிஃபார்ம், காலணிகளில் மாற்றம் கொண்டுவந்தோம். அப்போதுதான் மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட ஓவர்கோட், அவர்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக சொன்னார்கள். பெற்றோர்களிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்ததால், மாற்றங்கள் ஏற்புடையதாகிறது என்று உணர்ந்தோம்.

இதையே நம் பள்ளி ஆசிரியைகளுக்கும் கொடுத்தால் அவர்களுக்கும் பாடம் நடத்தும்போது வசதியாக இருக்கும் என்று தோன்றியதால், ஆசிரியர்களிடம் அதுதொடர்பாகப் பேசினேன். அவர்கள் முதலில் தயங்கினாலும் பின்னர் ஏற்றுக்கொண்டு ஒரு ‘ட்ரையல் பீரியட்’ பார்ப்போமே என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் அனுமதி வாங்கி அவர் தலைமையிலேயே சர்வதேச ஆசிரியர் தின விழாவில் எங்கள் பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்கினோம்'' என்றார்.


புதிய சீருடை குறித்து அப்பள்ளி ஆசிரியைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ''எங்களுக்கு இந்த ‘ஓவர்கோட்’ ஒரு தனி அடையாளத்தையும், கூடுதல் அங்கீகாரத்தையும், உயர்ந்த ஆளுமைப் பண்பையும் தருவதாக உணர்கிறோம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்கும் டாக்டர்கள், வக்கீல்கள் ஆகியோரைப்போல் எங்களுக்கும் இந்தச் சீருடை பெருமைக்குரிய விஷயமே'' என்கிறார்கள்.

மேலும் அப்பள்ளி மாணவர்கள் கூறும்போது, ‘'எங்க மிஸ், எங்கள மாதிரியே ஓவர்-கோட் போட்டு வர்றது வித்தியாசமாயிருக்கு, ஆனா நல்லாயிருக்கு. இந்த வருஷத்துல இருந்துதான் எங்க ஸ்கூல்ல இந்த மாற்றங்கள். மாணவர்கள்-ஆசிரியர்கள் எல்லாரும் புது யூனிஃபார்ம் போட்டு சூப்பரா இருக்கோம். எங்க ஸ்கூல் மாடர்ன் ஆகியிருச்சு. எங்க ஊருல நிறைய பிள்ளைங்க ஸ்கூலுக்கு வந்ததே இல்ல. ஆனா இப்போ அவுங்க எல்லாரும் எங்க பள்ளியின் மாற்றத்துக்காகவே புதுசா ஸ்கூலுக்கு வர்றாங்க’' என்றனர்.

இப்பள்ளியின் இத்திட்டத்திற்கு பல்வேறு சமூக நிலைகளில் இருந்து பெண்ணியம் பேசி பல விமர்சனங்கள் வந்தபோதிலும், அப்பள்ளி ஆசிரியைகளும், அவ்வூர் மக்களும் ஓவர்கோட் சீருடையை வரவேற்கின்றனர். 

ஒரு நிலையில் “மாற்றம்' அத்தியாவசமாகிறது.


No comments:

Post a Comment