சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Oct 2015

சவூதியில் கை வெட்டப்பட்ட தமிழக பெண்ணை மீட்க வேண்டும்: சகோதரி கோரிக்கை!

சவூதி அரேபியாவில் கை வெட்டப்பட்ட தமிழகப் பெண்ணை உடனடியாக மீட்க வேண்டும் என்று அவரின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.  

வேலூர் மாவட்டம் மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி முனிரத்தினம்.இவருக்கு வயது 55. இவர் வீட்டு வேலை பணிக்காக சவூதி அரேபியாவுக்கு சென்றார். அங்கு முதலாளியால் அவர் துன்புறுத்தப்பட்டு    கை வெட்டப்பட்ட நிலையில் பரிதவித்து வருகிறார்.
இது பற்றி அறிந்த கஸ்தூரியின் உறவினர்கள் அவரை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள கஸ்தூரியின் சகோதரி விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

" என்னுடைய சகோதரி கஸ்தூரி 3 மாதத்துக்கு முன்பு தான் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காகச்  சென்றார். அங்கு அவருடைய முதலாளி தொடர்ந்து துன்புறுத்தி, சாப்பாடுகூட  அளிக்காமல் பட்டினி போட்டுள்ளார். இதுபற்றி உள்ளூர் அதிகாரிகளிடம் கஸ்தூரி முறையிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த முதலாளி, என்னுடைய சகோதரியின் வலது கையை வெட்டி உள்ளார். தற்போது அவர் ரியாத் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய ஏஜெண்டு மூலம் எங்களுக்கு தெரியவந்தது. எனவே என்னுடைய சகோதரி நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தமிழக பெண்ணுக்கு நேர்ந்த துன்பத்திற்கு  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

" ரியாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து சவூதி வெளியுறவு அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகப் பெண்ணின் கையை வெட்டியவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவும், கடும் தண்டனை அளிக்கவும் இந்தியா வலியுறுத்தி உள்ளது" என்றார்.

மேலும் லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 2 ஆசிரியர்கள் உள்பட 3 இந்தியர்களின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அவர்கள் தற்போது வரை உயிருடன் தான் உள்ளனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ ஆதாரத்தில் இது தெரியவந்தது. அவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தமிழகப் பெண்ணின் கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment