லஞ்சம் வாங்குபவர்கள் பிடிபட்டு, தங்கள் வேலையையே இழப்பது உண்டு.ஆனால் இங்கே லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த இளம் ரயில்வே இன்ஜினீயர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கோரக்பூரில் ரயில்வே இன்ஜினீயராக பணியாற்றி வருபவர் சபுரப் குமார். பணியில் மிக நேர்மையாகவும் கண்டிப்பும் நிறைந்த 31 வயது இளைஞர். இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி கோரக்பூரில் இவர் வசித்து வந்த வீட்டில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
மேலும் அவரது நகங்கள் நீல நிறத்திலும் மாறி போயிருந்தன. இதையடுத்து சபுரப் குமார் பாம்பு கடித்து இறந்து போயிருப்பதாக இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீஸ் முடித்து விட்டது.
இந்நிலையில் சபுரப் குமாரின் சகோதரர் பிபின் குமார், போலீசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், '' தனது சகோதரருக்கு லோக்கல் மாபியாவிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் இருந்தது. ரயில்வேயில் தேவையற்ற இரும்பு பொருட்களை டெண்டர் எடுக்க ஒரு மாபியா கும்பல் முயற்சித்தது.ஆனால் அந்த கும்பலுக்கு சாதகமாக செயல்பட எனது சகோதரர் மறுத்து விட்டார்.

அந்த கும்பல் லஞ்சம் கொடுக்கவும் முன்வந்தது. ஆனால் எனது சகோதரர் அதனை ஏற்கவும் மறுத்து விட்டார். இதனால் அந்த மாபியா கும்பல்தான் எனது சகோதரரை கொடூரமாக அடித்து கொன்றுள்ளது. கடந்த இரு மாதங்களாகவே வேலை தொடர்பாக ஒரு கும்பல் எனக்கு நெருக்கடி தருகிறது என்று எனது சகோதரன் எனது தந்தையிடம் அடிக்கடி கூறி வந்தான்.எனவே இந்த விஷயத்தில் நேர்மையான வழக்கு விசாரணைத் தேவை '' என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பிகாரை சேர்ந்த சபுரப் குமார், பிர்லா இன்ஸ்டிடியூட்டில் பட்டம் பெற்றவர்.

No comments:
Post a Comment