நாடக மற்றும் திரைப்பட நடிகர்களுக்கு இலவச காப்பீடு வழங்கப்படும் என விஷால் அணியினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்து.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில், நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.
நடிகர் சரத்குமார் அணி சார்பில், தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும், துணைத்தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல், விஷால் அணி சார்பில், தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், விஷால் அணி சார்பில் இன்று மாலை சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. நடிகர் சிவகுமார் தேர்தல் அறிக்கையை வெளியிட, நடிகை சச்சு பெற்றுக்கொண்டார்.
மொத்தம் 42 வாக்குறுதிகள் அடங்கியுள்ள அந்த அறிக்கையில், சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் நடிகர் சங்க நிலத்தை மீட்போம், செயற்குழு, பொதுக்குழு ஒப்புதலோடு எஸ்.பி.ஐ ஒப்பந்தத்தை ரத்து செய்வோம். சங்கத்துக்கு மாதம் ரூ.30 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்க திட்டம் வசூலிக்கப்படும். நடிகர் சங்க நிலத்தில் புதிய கட்டடம் கட்ட குழு அமைத்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.
நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்களுக்கு இலவச காப்பீடு வழங்கப்படும். கட்டடம் கட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்க திரைப்படம் எடுத்து வருமானம் ஏற்படுத்தப்படும். நடிகர் சங்க நிர்வாகத்தில் இருந்த தவறுகள் சீர்செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நாடக நடிகர்களுக்கு உடை, மேக்கப் சாதனம் இலவசமாக வழங்கப்படும்.
சங்கத்தில் உள்ள நடிகர்களை, இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பரிந்துரை செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்படும். 3 நாடக நடிகர்கள், இரு குழுக்களுக்கு சுவாமி சங்கரதாஸ் கலைஞர் விருது தரப்படும். வெளியூர் நாடக கலைஞர்கள், சென்னையில் தங்க வசதி ஏற்படுத்தி தரப்படும். நாடகம் இல்லாத சமயங்களில் சினிமா வாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். நடிகர் சங்கத்தில் கேமரா, எடிட்டிங், இசை கோர்ப்பு கொண்ட திரைப்பட பிரிவு உருவாக்கப்படும். நடிகர் சங்கம் மூலம் சின்னத்திரை தொடர்களை எடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment