நடிப்பின் இலக்கணம் என்று சொல்லப்பட்டாலும், நடிகர் சங்க விவகாரங்களில் ஒதுங்கியே இருப்பார் கமல். சங்க தேர்தல் சிலவற்றில் ஓட்டு போடக்கூட மறந்தது (!) உண்டு!
ஆனால் இந்த தேர்தலில் விஷால் அணிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்தார் கமல். அது மட்டுமல்ல போட்டியிடும் நாசரை முன்மொழிந்தார்.
இந்த நிலையில் கமலை கடுமாயாக விமர்சனம் செய்தார் எதிர் அணியைச் சேர்ந்தவரும், தற்போதைய தலைவருமான சரத் குமார், “கமல்தான் விஷால் அணியை தூண்டி விடுகிறார். அவரது விஸ்வரூபம், உத்தம வில்லன் ஆகிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டபோது நான் எந்த அளவுக்கு உதவினேன் என்பதை மறந்துவிட்டு செயல்படுகிறார். கமல் நன்றிகெட்ட மனிதர்” என்று வெளிப்படையாகவே பேசினார்.
தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்காத கமல், வழக்கம்போல இதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் தனது தாக்குதலை சரத், நிறுத்தவில்லை.
தான் போகுமிடமெல்லாம் கமலைப்பற்றி கடுமையாக பேசி வருகிறார்.. பேசி என்பதை விட ஏசிவருகிறார் என்பது கமல் காதுக்கு இப்போதுதான் போயிருக்கிறது.
இதையடுத்து ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் கமல். நேற்று இரவு தனது நெருங்கிய நண்பர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கறார்.
விஷால் அணியினர், ஏற்கெனவே கமலை தலைவராக போட்டியிடச் சொல்லி கேட்டது பற்றியும் பேச்சு வந்திருக்கிறது. அதை நிறைவேற்றி விடலாமா என்றும் ஆலோசனை நடந்திருக்கிறது.
இது குறித்து இன்று நடிகர் சங்க வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஏற்கெனவே சரத் அணி ஆட்டம் கண்டிருக்கிறது. நிச்சயமாக அந்த அணி வரும் தேர்தலில் தோற்கத்தான் போகிறது. இந்த நிலையில் கமலே தலைவராக போட்டியிட்டால் சங்க உறுப்பினர்களில் ஆகப்பெரும்பான்மையானவர்கள் அவரைத்தான் ஆதரிப்பார்கள். சிறந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல.. அவர் சிறந்த நிர்வாகி என்பதும் அனைவருக்கும் தெரியும். தனது மன்றத்தை அவர் நிர்வகிக்கும் விதமும், தனது திரைப்படங்களில் அவர் காட்டும் நிர்வாகத் திறமையும் அனைவரும் அறிந்த விசயம். தவிர அப்பழுக்கற்றவர், நேர்மையானவர். ஆகவே போட்டியிட்டால் அவர்தான் தலைவர்” என்று சொல்லும் சங்க வட்டாரம், “கமல் களத்தில் குதித்தால் போட்டியிலிருந்து சரத் விலகுவார்” என்று சொல்லி அதிர வைக்கிறது.
“சரத்தை எதிர்த்து போட்டியிடும் நாசரை முன்மொழிந்தவர் கமல். இப்போது நாசருக்கு பதிலாக கமலே போட்டியிடுவாரா” என்ற கேள்விக்கும் பதிலை தயாராக வைத்திருக்கிறார்கள்:
“நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் நாசரின் நோக்கம். கமல் மூலமாக நடந்தால் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியே” என்கிறார்கள்.
”‘சரி.. ானால் ஒதுங்குவது என்பது சரத்துக்கு வீக் பாயிண்ட்டாக அமைந்துவிடாதா” என்றால், “தேர்தலில் நின்று அவமானகரமாக தோற்பதை விட, பெரிய நடிகரான கமலுக்காக விட்டுக்கொடுப்பது என்பது மரியாதைக்குரிய விசயமாகத்தானே இருக்கும்?
அப்படி ஒரு சூழல் அமைந்தால் சரத்தின் டிமாண்ட் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கும். “சங்க கட்டிடம் பற்றி புதிய டீம் முடிவெடுக்கட்டும். அதே நேரம் என்னையோ, ராதாரவியையோ அவமானப்படுத்தும்படியாக பழைய விசயங்களை கிளறக்கூடாது” என்பதுதான் அது!” என்கிறார்கள்.
“சரத்தின் வரம்பு மீறிய பேச்சால்தான் களத்தில் குதிக்கிறார் என்றால், சரத்தின் டிமாண்டை கமல் ஏற்றுக்கொள்வாரா” என்ற கேள்வியும் எழுகிறது.
அதற்கும் நடிகர் சங்க வட்டாரத்தில் பதில் சொல்கிறார்கள்:
“கமல் எப்போதுமே வீண் சர்ச்சைகளை தவிர்ப்பவர். தற்போதுகூட சரத்துக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருக்காது. மீண்டும் சரத் தலவராகக்கூடாது. நல்ல டீம் தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் கமல் நோக்கமாக இருக்கும். ஆகவே பழைய சர்ச்சைகளை கிளற வேண்டாம் என்று சரத் கோரிக்கை வைத்து விலகும் பட்சத்தில் அதை கமல் ஏற்பார்” என்கிறார்கள்.
“அதெல்லாம் இருக்கட்டும், வேட்புமனு பரிசீலனை வரை வந்துவிட்ட பிறகு மறுபடியும் முதலில் இருந்தா..?” என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள்.
“சங்க விதிகளுக்கு முரணாக எத்தனையோ முறைகேடுகள் நடந்துவிட்டன. தேர்தல் தேதியை கொஞ்சம் தள்ளிவைப்பதால் குடிமூழ்கிவிடாது. அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்தால், தேர்தல் இல்லாமல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கவும் வழி உண்டு!” என்கிறார்கள்.
ஆக.. “தலைவராகிறார் கமல்! ஒதுங்கி வழிவிடுகிறார் சரத்!” என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.
No comments:
Post a Comment