சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Oct 2015

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்ளிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ஹைதராபாத்திலுள்ள வனஸ்தலிபுரம்  காவல்துறையினர் விசாரித்து வரும் புகார் சற்று நூதனமானது. இந்த வழக்கு இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனமான ’ஃப்ளிப்கார்ட்’, தனது வாடிக்கையாளர் ஒருவரின் மீது  அளித்ததாகும். ஹைதராபத்தைச் சேர்ந்த, 32 வயது மதிக்கத்தக்க, வீராச்சாமி ரெட்டி என்பவரே இந்தப் புகாரில் குற்றம் சாட்டபட்டவர்.

இவர் ‘ஃப்ளிப்கார்ட்’ இணையதளத்தின் மூலமாகப் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான  தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி ‘ஃப்ளிப்கார்ட்’டில் உள்ளது. இந்த வசதியின் மூலம் தான் வாங்கிய பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுமாறு ‘ஃப்ளிப்கார்ட்’ டிடம் விண்ணப்பித்திருக்கிறார்   வீராச்சாமி. நிறுவனமும் அவ்வாறேசெய்தது.

அப்படி திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைச் சோதித்த போது தான் புரிந்தது, அவை எல்லாம் போலியானவை என்று. இதையே வழக்கமாக வைத்திருந்திருந்த வீராச்சாமி, ஒரு பொருளை இணையதளத்தில் ‘ஆர்டர்’ செய்வது. அது வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பிரித்து, அதற்கு பதிலாகப் போலியான ஒரு பொருளை உள்ளே வைத்து அட்டைப்பெட்டியை மூடி விடுவது. மீண்டும் ‘ஃப்ளிப்கார்ட்’டைத் தொடர்பு கொண்டு பொருளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுத் தொகையைச் செலுத்த விண்ணப்பிப்பது என வீராச்சாமி செம பிசியாக இருந்தார். 

இப்படி போலி மெயில்  கணக்குகள்,  போலி விலாசங்கள், போலி வங்கிக் கணக்குகள் என, 200க்கும் மேற்பட்ட இத்தகைய பரிவர்த்தனைகளில், சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வீராச்சாமி பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றியிருக்கிறார். நாளடைவில், இந்தப் பின்னணியை கண்டறிந்த அந்த நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

எத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித மனம் தவறான நோக்குடனேயே அதைக் கையாள்கிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வீராச்சாமியும் ஒரு உதாரணம்.



No comments:

Post a Comment