சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Oct 2015

நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணி சத்யராஜ், பாக்யராஜ் ஆதரவை இழந்ததன் பின்னணி என்ன?

டிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினருக்கு வெற்றி வாய்ப்பு பெருகி வருவதாக கூறப்படுகிறது. பொது தேர்தலின் போது, எப்படி சென்னை லயோலா  கல்லூரி கருத்து கணிப்பு நடத்துகிறதோ அதுபோல நடிப்பு கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், விஷால் அணியினருக்கு 64 சதவீத வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஷால் தரப்பில் இருந்து தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். செயலாளருக்கு விஷாலும் பொருளாளருக்கு கார்த்தியும் துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் நிற்கின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பிரசன்னா,ஸ்ரீமன், நடிகைகள் சங்கீதா, குட்டி பத்மினி உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகின்றனர். 

சரத்குமார் அணி சார்பாக தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். ராதாரவி செயலாளர் பதவிக்கு நிற்கிறார். இவர்கள் தவிர சிம்பு துணைத்தலைவர் பதவிக்கும் பொருளாளர் பதவிக்கு  கண்ணன் ஆகியோரும் களத்தில் இருக்கின்றனர். அதோடு ராம்கி, டி.பி. கஜேந்திரன், ஜாக்குவார் தங்கம், கே.ராஜன் உள்ளிட்டவர்களும் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். 


இப்போது என்னவென்றால் மறைமுகமாக இதுவரை விஷால் அணியினருக்கு ஆதரவு அளித்து வந்தவர்கள் இப்போது நேரடியாகவே களம் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த இருநாட்களுக்கு முன், ராகவேந்திரா திருமண மண்டபத்தில் விஷால் அணியினர் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் இதனை நேரடியாகவே காண முடிந்தது. இந்த கூட்டத்தில் மட்டும்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்ட நடிக- நடிகையர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதுதான் விஷால் அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட நாடக நடிகர்களும் பங்கேற்றிருப்பது எதிர் அணியினரை  கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அது மட்டுமல்லல சத்யராஜ், பாக்கியராஜ், நிழல்கள் ரவி, ராஜேஷ், எஸ்.வி. சேகர்,வடிவேலு, ஆர்யா,சந்தானம், டெல்லி கணேஷ்,,ஜெயம் ரவி, டெல்லி கணேஷ், பசுபதி போன்ற முன்னணி நடிகர்களும் இந்த கூட்டத்தில் மேடை ஏறியது விஷால் தரப்பினரை உற்சாகமடைய வைத்துள்ளது. குறிப்பாக சத்யராஜ், பாக்யராஜ், வடிவேலு போன்ற மூத்த கலைஞர்களின் ஆதரவு இளம் தலைமுறை நடிகர்களுக்கு கிடைத்து மிகப் பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும். 

சத்யராஜ், பாக்யராஜ் இருவரையும்  இந்த அணிக்கு கொண்டு வந்ததில் நடிகர் சிவகுமார் முக்கிய பங்காற்றியுள்ளார். எல்லோரும் 'கோயம்புத்தூர்காரர்கள்' என்ற ரீதியில் இணைந்துள்ளனர். குறிப்பாக சத்யராஜை சரத்குமார் அணி  இழந்தது மிகப் பெரிய இழப்பு என்றே கூறப்படுகிறது.  பூர்ணிமாவும் ராதிகாவும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள்தான். பாக்யராஜுக்கும் ராதிகாவுக்கும் நல்ல நட்பு உண்டு. இருந்தும் சிவகுமார் சொல்லை தட்ட பாக்யராஜ் விரும்பவில்லை அதோடு ஊர்பாசமும் அவரை விஷால் அணிக்கு சாய வைத்து விட்டது. 

விஜயகாந்துடன் நடிகர் வடிவேலு மல்லுக்கு நின்ற போது, சரத்குமார்தான் வடிவேலுக்கு மறைமுகமாக ஆதரவாக இருந்தார். இப்போது அவரும் விஷால் அணிக்கு தாவி விட்டத்தில் சரக்குமார் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி.


நடிகைகள் தரப்பில் சரண்யா பொன்வண்ணன்,பானுப்பிரியா, குட்டி பத்மினி, கோவை சரளா, சாயாசிங், சபீதா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானவர்களின் ஆதரவை விஷால் தரப்பு பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இளைய தலைமுறை நடிக- நடிகைகளின் அத்தனை பேரின் ஆதரவையும் விஷால் தரப்பு கைப்பற்றி விட்டதாகவேத் தெரிகிறது. 

அதோடு தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசரை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இத்தனை காலம் சினிமாத்துறையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத பண்பட்ட மனிதர். அவரை தலைவராக நிறுத்தியிருப்பதும் விஷால் தரப்புக்கு கூடுதல் பலம்.!

No comments:

Post a Comment