சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Oct 2015

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

ண்மையில் ஏர்டெல் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் ஏர்டெல் 4ஜியை விட, வேகமான நெட்வொர்க் உண்டா? அப்படி இருந்தால் காட்டுங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் மொபைலுக்கான செலவுத் தொகையை செலுத்துவதாக அந்த விளம்பரம் கூறியது. 

ஏர்டெல்லின் சவால் விளம்பரம் குறித்து அகில இந்திய விளம்பர தரக்கட்டுபாட்டு கவுன்சிலிடம்  நுகர்வோர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, அந்த விளம்பரத்தை மாற்றியமைக்க விளம்பர தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் '' உங்கள் நிறுவனத்தின் விளம்பரம் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு இருக்கவில்லை.  அதோடு மக்களிடம் சவால் விடுவது அவர்களை தவறான வழி நடத்துவது போல் அல்லது மிகைப்படுத்துவதாகவும்  அமைந்துள்ளது. நீங்கள் சொல்வது போல உங்கள் சவாலை நிரூபித்து காட்டவும் அல்லது அந்த விளம்பரத்தை திரும்ப பெறவும் .வருகின்ற 7ஆம் தேதிக்குள் இதனை நீங்கள் நிரூபித்து காட்ட வேண்டும். '' என உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே ஏர்டெல் நிறுவனம். கடுமையான ஆய்விற்கு பிறகே இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. 



No comments:

Post a Comment