சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2015

சமைக்கத் தெரிந்தால்... ஜஸ்ட் லைக் தட் சம்பாதிக்கலாம்!

நான் ருசியா, விரைவா, ஒரே ஆளா 10 பேரில் இருந்து 50 பேருக்குக்கூட சமைச்சிடுவேன்..!’ எனும் சகோதரிகள், அந்தச் சமையலையே தங்கள் தொழில்வாய்ப்பு ஆக்கிக்கொள்வதற்கு வழிகாட்டும் கட்டுரை இது. ‘சமைக்கத் தெரிந்தால், ஜஸ்ட் லைக் தட் சம்பாதிக்கலாம்!’ என்று அதற்கான ஆலோசனைகளை இங்கு வழங்குகிறார்கள், இந்தத் துறையில் உள்ள முன்னோடிகள்!
‘‘குறைந்தது 100 ரெசிப்பிகள் தெரியும் எனும் பெண்கள், இனியும் உங்கள் வீட்டு சமையலறைக்கு உள்ளேயே முடங்கியிருப்பது அனர்த்தம். வாருங்கள்... இனி நீங்கள் ஸ்டார் ஹோட்டல் செஃப்!’’ என்று உற்சாகமாகப் பேசினார், டெல்லியில் உள்ள ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ‘செஃப் லிங்க்’-ன் நிறுவனர் ‘செஃப்’ சேகர்.
அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டலை அணுகுங்கள்!
‘‘முதலில் உங்களைப் பற்றிய பயோடேட்டா, சமையல் வீடியோ, ஃபேஸ்புக், பிளாக் விவரங்களை பிரின்ட் அவுட் அல்லது சி.டி-யாக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் (செயின் ஹோட்டலாக இருந்தால் சிறப்பு) எக்ஸிக்யூட்டிவ் செஃப் அல்லது கார்ப்பரேட் செஃபை நேரடியாக அணுகுங்கள் (ஹோட்டல் ரிசப்ஷனில் சென்று கேட்டால் வாய்ப்பு எளிதாகக் கிடைப்பது அரிது). ‘எனக்கு செட்டிநாடு சமையல், மதுரை சமையல், தூத்துக்குடி சமையல், கொங்குநாட்டு சமையல் தெரியும்’ என்று உங்களுக்குத் தெரியும் சமையல் வகைகளை அவரிடம் தெரிவியுங்கள். மேலும், உங்களின் ஸ்பெஷல் கைமண ரெசிப்பிகளையும் அவரிடம் எடுத்துச் சொல்லி, உங்களைப் பற்றிய சி.டி-யை அவரிடம் கொடுங்கள்.
உங்களின் அணுகுமுறையும், நீங்கள் வழங்கிய தகவல்களும் அவர்களுக்கு உங்களைப்பற்றிநன்நம்பிக்கை தரும்பட்சத்தில், அவர்கள் உங்களைக் குறிப்பிட்ட ஒரு நாளில் ஹோட்டலில் சமைத்துக்காட்ட அழைப்பார்கள். அதற்கு முன்பாக நீங்கள் சமைக்கவிருக்கும் ரெசிப்பிக்குத் தேவையான பொருட்களை உங்களிடம் கேட்டறிந்து ஏற்பாடு செய்துவிடுவார்கள். ஹோட்டல் நிர்வாகத்தால் உங்களுக்கு அளிக்கப்பட்ட உதவியாளர் ஒருவருடன், ஹோட்டலின் கார்ப்பரேட் அல்லது எக்ஸிக்யூட்டிவ் செஃப், ஜெனரல் மேனேஜர், ஹெச்.ஆர். மேனேஜர் போன்ற முக்கியப் பொறுப்பாளர்களின் முன்னிலையில், நீங்கள் சமைத்துக்காட்ட வேண்டும்.
சமைத்த விதம், நேரம், உணவின் ருசி என்று பல காரணிகளிலும் ஹோட்டல் நிர்வாகிகளை நீங்கள் திருப்திப்படுத்திவிட்டால், யூ ஆர் செலக்டட்! நீங்களும் இனி அவர்களுடைய கிச்சன் ஸ்டாஃப். ஹோட்டல் சார்பில் நடத்தப்படும் உணவு விழாக்களில் உங்கள் கைப்பக்குவத்தில் தயாரான ஸ்பெஷல் ரெசிப்பிகளுக்கும் இடம் அளிக்கப்படும். நேரம் தவறாமை, ருசி, சமயோஜிதம் என்று தொடர்ந்து சிறப்பாக செயலாற்றினால், ‘செஃப்’ அந்தஸ்து உங்களுக்குக் கிடைக்கும். ஹோட்டலின் வெப்சைட்டில் இடம்பெறும் அளவுக்கு உங்களுக்கான புரமோஷன் இதில் இருக்கும்.
இப்படி இல்லத்தரசிகளாக இருந்து, டெல்லியில் உள்ள ஐ.டி.சி ஹோட்டலில் தங்கள் கைமணத்தால் வாய்ப்பு பெற்று, இன்று அங்கு செஃபாக உயர்ந்திருக்கும் குஞ்சன் கொய்லா மற்றும் சுமன் கால் போன்ற பெண்கள், உங்களுக்கான நம்பிக்கை உதாரணங்கள். ஒரு நடை உங்கள் ஊரின் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்று முயற்சியை ஆரம்பிக்கலாம்தானே?!’’ என்று திரி தூண்டும் ‘செஃப்’ சேகர்,ஐ.டி.சி. உள்ளிட்ட பல ஹோட்டல்களில் பணிபுரிந்தவர்.
ஐ.டி கம்பெனிகளில் ஆர்டர் எடுக்கலாம்!
‘‘ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், வெளியூர்க்காரர்கள்தான். வீட்டுச் சாப்பாட்டுக்காக ஏங்கும் அவர்களை, உங்கள் சமையல் பிசினஸின் டார்கெட் ஆக்கலாம். உங்கள் வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஐ.டி. நிறுவனத்தில் தெரிந்தவர்கள் மூலமாக அந்த ஊழியர்களிடம் மீல்ஸ் ஆர்டர் எடுக்கலாம். சமையல் திருப்தியாக இருக்கும்பட்சத்தில் வாய்வழியாகவே உங்களுக்கான விளம்பரம் பெருகும். 10-ல் இருந்து 50 சாப்பாடு வரை செய்துகொடுத்தாலே, பல ஆயிரங்கள் லாபம் கியாரன்டி. அருகிலேயே அலுவலகம் என்பதால், ஆர்டர் எடுப்பது, சமைத்த உணவை டெலிவரி செய்வது எல்லாம் சுலபமாகிவிடும்.
ஐ.டி. நிறுவனம் என்றில்லை... வீட்டுக்கு அருகில் உள்ள பெரிய மருத்துவமனை, வணிக பிளாஸாக்கள், அலுவலகங்கள் என்று எதையும் அணுகலாம். அங்கெல்லாம் வீட்டுச் சாப்பாடுக்காக சிரமப்படுபவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார், சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் பிசினஸ் செய்துவரும் பவித்ரா.
சமையல் ராணிகளே... இனி, நீங்கள் சாதனை ராணிகள்

ஃபுட் கேரவன்... புது ரூட்!
டகவியலாளர் ‘மெட்ரோ’ பிரியா, இப்போது ஃபுட் பிசினஸில் பிஸி!
‘‘இயல்பிலேயே எனக்கு சமையலில் ஆர்வம். விஜய் டி.வி ‘கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளரா கலந்துக்கிட்ட அனுபவம் தந்த ஊக்கத்துல ‘பிரியா’ஸ் கிச்சன்’ என்கிற பேர்ல சிறிய அளவில் ஃபுட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன். உறவுகள், நண்பர்கள்னு தெரிஞ்சவங்க, வயசானவங்க, உடல்நிலை தேற ஹெல்தி ஃபுட் கேட்கிறவங்கனு இப்படி தினமும் 15 பேருக்கு செய்து கொடுத்துட்டு வர்றேன். உதவிக்குக்கூட எனக்கு யாரும் தேவைப்படல. பத்தாம் வகுப்புப் படிக்கும் என் பையனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு கிச்சனுக்குள்ள போனா, சில மணி நேரங்களில் வேலையை முடிச்சிடுவேன். அடுத்ததா, ஃபுட் கேரவன் (Food Caravan) ஆரம்பிக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அதாவது, நடமாடும் உணவகம். நகரில் உள்ள முக்கிய இடங்களில் நகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற்று உணவுகளை வேனில் இருந்தபடியே விற்பது. விதம்விதமா, மணக்க மணக்க சமைக்கத் தெரிஞ்சுட்டு, வீட்டுக்கு மட்டுமே சமைச்சுட்டு இருக்கிற பெண்கள்... ப்ளீஸ் கம் அவுட்!’’
கேக் செய்தால்... மாதம் ரூபாய் 15 ஆயிரம்!
திவ்யா தூத்துக்குடியைச் சேர்ந்தவர். ‘‘ஒரு ஆர்வத்துல கேக் செய்யக் கத்துக்கிட்டேன். அதையே ‘ஃபிளேவர்டு’ங்கிற பேர்ல வீட்டில் இருந்தே பிசினஸா செய்ய ஆரம்பிச்சேன். இன்னிக்கு நிக்கக்கூட நேரமில்லாம என் பிசினஸ் என்னை பிஸியாக்கிருச்சு. உங்களுக்கும் ருசியா கேக் செய்யத் தெரியுமா? அதை பிசினஸ் ஆக்க நினைக்கிறீங்களா? 26 லிட்டர் அல்லது ஒரே நேரத்துல மூணு கேக் செய்ற கொள்ளளவு கொண்ட அவன், கேக் செய்யத் தேவையான பொருட்கள், நிறைய கற்பனை வளம், டி.எஸ்.எல்.ஆர் குவாலிட்டி கேமரா, நல்ல லென்ஸ்... இதெல்லாம் இருந்தா பிசினஸை ஆரம்பிச்சுட வேண்டியதுதான். நீங்க செய்ற கேக்குகளை சுவாரஸ்யமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக்கில் பதிவிட்டு ஆர்டர் பெற ஆரம்பிக்கலாம். ஒரு மாதத்தில் மூன்று திருமண கேக்குகள் செய்தால் ரூபாய் 10,000 லாபம் சுலபமா கிடைக்கும். 1 கிலோ ஃபான்டன்ட் கேக்குகள் மாதம் 10 செய்தால், ரூபாய் 15,000க்கு மேல நிச்சய லாபம் உண்டு. ஆல் த பெஸ்ட்!’’

 வீட்டிலிருந்தே மாதம் 1 லட்சம் வருமானம்!
த்மா, ‘தர்மா ஃபுட்ஸ்’, சிட்லபாக்கம், சென்னை...
‘‘எம்.எஸ்ஸி பட்டதாரி நான். எம்.எஸ்.எம்.இ. மூலமா லோன் முதல் மார்க்கெட்டிங் வரை உணவுத் தொழிலுக்கான ஏ டு இஸட் விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி பிரிசர்வேட்டிவ்கள் இல்லாத சாம்பார், ரச பவுடர்களை தயாரித்து விற்க ஆரம்பிச்சேன். அடுத்ததா, ஃபில்டர் காபி டிகாக்‌ஷன் தயாரிச்சேன். சொன்னா நம்புவீங்களா... மாசம் ஒரு லட்சத்துக்கும் மேல இப்போ வருமானம் பார்க்கிறேன். மாமனார், கணவர் துணையோட மூன்று பணியாட்களை வெச்சு ‘தர்மா ஃபுட்ஸ்’ஸை நடத்திட்டு இருக்கேன். அடுத்ததா கேட்டரிங் ஆர்டருக்காக முயற்சி செய்துட்டு இருக்கேன். ஐ.டி. நிறுவனங்கள்தான் என் இலக்கு. இதையெல்லாம் நீங்களும் பண்ணலாம்... தேவை - ஆர்வம், விடாமுயற்சி, உழைப்பு!’’

எம்.எஸ்.எம்.இ... தொழிலுக்கான திசைகாட்டி!
மைக்கத் தெரியும். ஆனாலும் ஒரு பயிற்சி எடுத்தா இன்னும் நம்பிக்கையா இருக்குமே..!’ என்று நினைப்பவர்களுக்கு, அதற்கான இடத்தை கைகாட்டுகிறார், சென்னையில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையத்தின் (எம்.எஸ்.எம்.இ) உதவி இயக்குநர் சிவலிங்கம்.
 
‘‘18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஊறுகாய், ஜாம், ஜூஸ், ரெடி டு ஈட் உணவு வகைகள், மசாலா பொடி வகைகள் போன்றவற்றைத் தயாரிப்பது, வியாபாரம் செய்வது, வர்த்தகரீதியாக பெரிய அளவில் கொண்டு செல்வது, அதற்கான இயந்திரம் வாங்குவது, உணவுக்கான தரச்சான்றிதழ் எங்கு, எப்படிப் பெறுவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கு அணுக வேண்டிய அலுவலர்களின் விவரங்கள் என்று அனைத்துவிதமான பயிற்சிகளும், தகவல்களும் எம்.எஸ்.எம்.இ மூலமாக வழங்கப்படும். மேலதிக விவரங்களை, 044 - 22501011/12/13 என்ற எண்ணில் அழைத்து அல்லதுwww.msmedi-chennai.gov.inஎன்ற வலைதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்!’’

ஃபேஸ்புக் பேஜ், பிளாக் ஆரம்பிக்க..!
‘‘இன்று எந்த பிசினஸுக்கும் ஃபேஸ்புக் பேஜ், பிளாக் போன்ற தொழில்நுட்பத் தளங்கள் அவசியமாகின்றன. சமையலும் இதில் அடங்கும். சமூக வலைதளங்களை உங்கள் சமையல் தொழிலுக்கான விளம்பரத்தளமாக வடிவமைத்துக்கொள்வது வெற்றிக்கான வாசல்களைப் பெருக்கும். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாதே...’ என்று மறுகத் தேவையில்லை. மிகச் சுலபமே..!’’ என்று ஃபேஸ்புக் பேஜ், ஃபுட் பிளாக் ஆரம்பிக்க எளிமையாக வழிகாட்டுகிறார் திவ்யா.
‘‘ஃபேஸ்புக் பேஜ் ஆரம்பிக்க,https://www.facebook.comஎன்பதை டைப் செய்து, ‘கிரியேட் அன் அக்கவுன்ட்’ க்ளிக் செய்து தகவல்களை அளித்து, உங்கள் பெயரில் அல்லது சமையல் தொழில் பெயரை முன்னிறுத்தி கணக்கைத் துவங்குங்கள். அல்லது ‘கிரியேட் எ பேஜ்’ என்பதை க்ளிக் செய்து உங்கள் தொழில் பெயரில் அந்த பேஜை ஆரம்பியுங்கள். நீங்கள் சமைத்த உணவுகளை கவர்ச்சிகரமான புகைப்படங்களாக எடுத்து அந்தப் பக்கத்தில் பதிவிடுங்கள். உங்கள் நட்பு வட்டத்தை எல்லையின்றி பெருக்கி, பல நூறு, பல்லாயிரக்கணக்கானவர்களை உங்கள் ஃபேஸ்புக் பக்கம் சென்றடையுமாறு செயலாற்றுங்கள். ஆர்டர்கள் அதிலிருந்தே கிடைக்கப் பெறுவீர்கள்.
ஃபுட் பிளாக் ஆரம்பிக்க முதற்கட்டமாக, உங்களுக்கு என்று ஒரு டொமைன் பெயர் ஆரம்பிக்கவேண்டும். உதாரணத்துக்கு ‘சுந்தரி’ என்ற பெயரில் ஃபுட் பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்றால்,www.sundarikitchen.comஎன்கிற பெயரில் டொமைனை கூகுள் மூலமாக ஆரம்பிக்க வேண்டும். 50 ரூபாய்தான் செலவாகும். இப்படி டொமைன் ஆரம்பித்தால், வாடகையாக மாதம் 150 முதல் 5,000 வரை நீங்கள் செலவு செய்ய வேண்டி வரும்.
உங்கள் கைப்பக்குவத்தை அப்படியே இதில் வார்த்தைகளாவும், சுவைக்கத் தூண்டும் புகைப்படங்களாகவும் உருமாற்றிப் பதியுங்கள். நட்பு வட்டத்தை விரிவுபடுத்துங் கள். உங்கள் தளத்தை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கு மேல் கூடிவிட்டால், எவ்வளவு கூடுகிறது என்பதைப் பொறுத்து மாதம் ரூபாய் 35,000 முதல் ரூபாய் 1,00,000 வரை சம்பாதிக்கலாம். அந்த ஒன்றரை லட்சம் எண்ணிக்கை இறங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். ஏனெனில், அந்த எண்ணிக்கை கூகுளில் இருந்து பல நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை உங்கள் பிளாக்குக்கு கொண்டுவந்து சேர்க்கும். உங்கள் தொழிலுக்கு விளம்பரம், ஆர்டர்களை பிளாக் மூலமாகக் கிடைக்கப் பெறுவதுடன், உங்கள் பிளாக்குக்கு வரும் விளம்பரங்கள் மூலமாகவும் வருமானம் கிடைக்கும்.’’


No comments:

Post a Comment