சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2015

நெருங்கும் தேர்தல்: கருணாநிதி சாமர்த்தியம் கமலிடம் பலிக்குமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் நடிகர் கமல்ஹாசன் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பது  அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.  

'இந்திய இலக்கியத்தில் தமிழின் உச்சம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதை நூல் வெளியீட்டு விழா, வரும் 10-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி கலந்து கொள்ள, அவருடன் நடிகர் கமலும் கலந்து கொள்வது ஆட்சியாளர்களை மட்டும் இல்லாமல், திரைத்துறையினைரையும் உற்று கவனிக்க வைத்துள்ளது.
இது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம்.
''அ.தி.மு.க.வினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் எனக் கூறி வந்தனர். அதற்காக அவர்கள் சில கணக்குகளை போட்டு பிரச்சாரங்களும் செய்து வந்தனர். ஜெயலலிதாவும், தான் அடுத்த பிரதமராக வர வேண்டும், அதற்கு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் நாம் ஜெயிக்க வேண்டும் என தன் கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டார். இது ஒரு புறம் இருக்க, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்பாடு செய்த விழா ஒன்றில் கமல், வேட்டி கட்டிய தமிழன்தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று தமிழர்களை மனதில் வைத்து பேசினார்.

கமலின் இந்த பேச்சு ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. இந்த நிலையில் விஸ்வரூபம் பட ரிலீஸ் தேதிகள் அறிவிக்கபட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கபட்ட படம் எனவும், அதற்கு தடை போட வேண்டும் எனவும் அவர்கள் போராட ஆரம்பித்தனர். அதற்கு மேலிடம் மறைமுகமாக ஆதரவு தந்தது. முஸ்லிம் நிர்வாகிகள் மத்தியில் படத்தை திரையிட்டு காட்டி அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிய பிறகும், படத்துக்கு தடை தொடர்ந்தது. 'என் சொத்துக்கள் எல்லாத்தையும் அடமானம் வைத்துதான் நான் இந்த படத்தை எடுத்துள்ளேன். இதை ரிலீஸ் செய்யாவிட்டால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேற போவதை தவிர வேறு வழி கிடையாது' என கமல் அப்போது கூறினார்.
அதன் பிறகு மக்கள் மத்தியில் கமலுக்கு ஆதரவு பெருகி, ஆட்சியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது. பின்பு படம் ரிலீஸ் செய்யபட்டது. இந்த சம்பவம் கமலுக்கு கடுமையான மன உளைச்சலையும், நெருக்கடியையும் கொடுத்தது. இது வரை சமூக விஷயங்களில் மட்டும் அக்கறை காட்டி வந்தார் கமல். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதுடன், தன் ரசிகர்களையும் அப்படியே இருக்கவும், வளர்க்கவும் செய்தார். ஆனால், இப்போது அவர் வேறு ரூட் பிடிக்க தொடங்கியுள்ளார் என்றும் சொல்கின்றனர். அதன்படி வெளி நிகழ்சிகளில் அதிகம் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார். பெங்களூரில் அவரது ரசிகர்கள் பிரமாண்ட மாநாடு நடத்த அனுமதி கேட்டனர். அதற்கு அவர் தலையாட்ட பிரமாண்டமாக ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த  நேரத்தில் வைரமுத்துவின் சிறுகதை நூல் வெளீயீட்டு விழா 10-ம் தேதி சென்னையில் நடை பெற இருக்கிறது. அதில் கருணாநிதி, கமல், வைரமுத்து மூவரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கு கமல் ரசிகர்கள் தமிழகம் முழுக்க பிளக்ஸ் போர்டு மூலம் விளம்பரம் செய்துள்ளது அரசியல் ஆர்வலர்களை உற்று நோக்க வைத்துள்ளது. கருணாநிதியும் விஸ்வரூபம் பட ரிலீஸ் பிரச்னையை பேசி, கமலையும் அரசியல் பேச வைப்பார். அதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது'' என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கமல் ரசிகர்களோ, ''தலைவர் எப்போதும் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர். வைரமுத்துவின் நெருங்கிய நண்பரும் கூட. அந்த வகையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்சியில் கலந்து கொள்கிறார். பிளக்ஸ் வைத்து விளம்பரம் செய்வது எப்போதும் போல்தான்'' என்று முடித்துக் கொண்டனர்.
ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் கருணாநிதியுடன் ஒரே மேடையில் கமல் ஏற இருப்பது ஆளும் அதிமுக தரப்பை உற்று நோக்க வைத்துள்ளது.  எந்த மேடையையும் தனக்கு சாதகமானதாக ஆக்கிக்கொள்ளும் திறன் கருணாநிதிக்கு எப்பொழுதுமே உண்டு. அது இந்த மேடையில் வெளிப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அதே சமயம் கடந்த காலங்களைப்போன்றே தன் மீது எவ்வித அரசியல் முத்திரை விழுந்துவிடாமல் நழுவிக்கொள்ளும் திறன் கமலுக்கும் உண்டு.
பார்க்கலாம் யாருடைய சாமர்த்தியம் அதிகம் வெளிப்படுகிறது என்று! 


No comments:

Post a Comment