சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2015

விமர்சனங்கள் மனிதனுக்கு எதிரானதா?

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். என்னுடன் வேலை செய்யக்கூடியவர்கள் வயது அதிகமாகவும் இருக்கின்றார்கள்; குறைவான வயதுடையவர்களும் இருக்கின்றார்கள். எல்லோரும் ரொம்ப சகஜமாகவே பழகிக் கொள்வோம். 

சிறு சிறு விஷயங்களில் கூட சில கருத்து முரண்பாடுகள் எழும்போது, அதை எதிர் கொள்வது என்பது ரொம்ப கடினமான விஷயம்தான். சில நேரங்களில் நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளுக்கு எதிர் வினையாக விமர்சனங்கள் எழும்போது, அதை எதிர் கொள்வதுதான் இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, யுவதிகளுக்கும் தேவைப்படுகின்றது என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும். இதை நாம் அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திருப்போம். 

இன்றைய இளைஞர்களிடம் ஏதோவொரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனைகளும் இருக்கின்றது. அதை நோக்கிய உடல் உழைப்புகளையும், கஷ்டங்களையும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், ஒன்றைத் தவிர. அதுதான், ‘விமர்சனம்’. இதை எதிர்கொள்வதில் தான் நாம் கவனமாக இருக்கின்றோம்.

இதனால், அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியங்களும், இலக்குகளும் புதைக்கப்பட்டு, கனவுகள் தகர்க்கப்பட்டு, எடுத்ததை விட்டுவிட்டு, கிடைத்ததை எடுத்துக் கொண்டு வாழும் மனப்பக்குவத்திற்கு ஆளாகின்றோம். ஆனால், இதுவல்ல ஒரு லட்சியவாதியின் அடையாளம். விமர்சனங்களை எதிர்கொண்டு, தான் எடுத்துக் கொண்ட லட்சியத்தை அடையும் வரை முயற்சி செய்ய வேண்டும். அதுதான் ஒரு லட்சியவாதியின் அடையாளம்.
விமர்சனங்கள் என்பது மனிதனுக்கு எதிரானதா? நிச்சயமாக இல்லை. விமர்சனங்கள் என்பது முன்னேற்றத்தின் தூண்டுகோள். நம்மை ஒருவர் ஒரு விஷயத்தில் விமர்சனம் செய்யும் பொழுது, நம்மிடம் உள்ள குறைகளில் நின்று அணுக முயற்சிக்க வேண்டும்.

அப்பொழுதுதான், நம்மிடம் உள்ள பிரச்னைகள் தீரும். சொல்லப்படக்கூடிய விஷயங்கள் எல்லாவற்றையும் நாம் தவறாகக் எண்ணக்கூடாது. ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தும். அதனால், அது எந்த இடத்தில் கிடைத்தாலும் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். தரங்கெட்ட விமர்சனங்கள் நமக்கு இழிவாகும். அதற்கு எதிராக எல்லா நேரத்திலும் துணிந்து போராடுங்கள். அது, நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆரோக்கியமாகும்.


No comments:

Post a Comment